நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.
அண்டை நாடான நேபாளத்தில் மேற்கு போகாராவில் இருந்து தலைநகர் காத்மாண்டுவிற்குச் பேருந்து திங்கள்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மத்திய மாவட்டமான தாடிங்கில் உள்ள திரிசூலி ஆற்றில் கவிழ்ந்தது.
தகவல் அறிந்ததும் நிகழ்விடத்தில் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், இந்த விபத்தில் 17 பேர் பலியாகினர். மேலும் 27 பேர் காயமடைந்தனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய பேருந்தில் 44 பேர் பயணித்ததாக மாவட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பேருந்து விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. நேபாளத்தில் சமீபத்திய ஆண்டுகளில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
2024–25 நிதியாண்டில், நாட்டில் 7,669 சாலை விபத்துகளும் 190 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Summary
At least 17 people died after a bus travelling from western Pokhara to the capital Kathmandu plunged into the Trishuli River in the central district of Dhading early Monday, a senior official at the District Administration Office, Dhading, said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! | Bangladesh bus plunge into river

வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்!

நேபாளம்: சாலை விபத்தில் இரண்டு இந்தியர்கள் பலி

நேபாளம்: பேருந்து கவிழ்ந்து 7 இந்தியர்கள் பலி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



