தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

எகிப்து தேவாலயம் வெளியே மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: 6 பேர் சாவு

எகிப்து தேவாலயத்தின் வெளியே மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:28 pm

Raghavendran

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு எகிப்தின் ஹெல்வான் மாவட்டத்தில் அமைந்துள்ள மார் மினா தேவாலயத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், தேவாலயத்தின் வெளியே திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

இதனால், சம்பவ இடத்திலேயே இரண்டு போலிஸார் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அப்போது அங்கிருந்த போலிஸாரால் நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொருவர் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பித்துச் சென்றார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக, ஏப்ரல் மாதம் இதேபோன்று இருவேறு தேவாலயங்களின் வெளியே நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் 45 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள எகிப்து நாட்டில் வெறும் 10 சதவீதத்துக்கும் குறைவான அளவில் கிறிஸ்துவர்கள் சிறுபான்மை அமைப்பாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.