பள்ளிக்கு வீல் சேரில்..!
மன வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகளை வீடு தேடி சிறப்புப் பேருந்தில் அழைத்துச் சென்று சிறப்புக் கல்வி, பயிற்சிகளைப் புகட்டி வருகிறது "ஹோம் சிறப்புப் பள்ளி'.


மன வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகளை வீடு தேடி சிறப்புப் பேருந்தில் அழைத்துச் சென்று சிறப்புக் கல்வி, பயிற்சிகளைப் புகட்டி வருகிறது "ஹோம் சிறப்புப் பள்ளி'.
குழந்தைகளைப் பாதிக்கும் மன வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் பெற்றோருக்கு சவாலாக நிற்கின்றன. இந்தக் குறைபாடுடைய குழந்தைகளை பள்ளி வாகனம் மூலம் அழைத்து சென்று, சிறப்புக் கல்வி, தசைப் பயிற்சி, யோகா, நடனம், விளையாட்டு உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி பக்குவப்படுத்தி வருகிறது கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அமைந்துள்ள ஹோம் சிறப்புப் பள்ளி.
25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அறிவுசார் குறைபாடுடையோருக்கான இந்தச் சிறப்புப் பள்ளியில் மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 50 -க்கும் மேற்பட்ட ஆண், பெண் குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்தக் குழந்தைகள் வீல் சேரிலேயே பள்ளிக்கு வந்து கல்வி பயின்று, வீட்டுக்குச் செல்லும் வகையில் சிறப்புப் பேருந்து இயக்கி வைக்கும் நிகழ்வு கடந்த ஜூன் 27-இல் நடைபெற்றது. இப் பேருந்தை மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், சார்பு நீதிபதி எம். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் தொடக்கிவைத்தனர்.
இந்தப் பள்ளியை நிர்வகித்து வரும் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ்
கூறியதாவது:
இந்தச் சிறப்பு பள்ளிக்கு வீல் சேரில் வரும் குழந்தைகள் வீல் சேருடன் பேருந்தினுள் செல்ல பேருந்தின் படிக்கட்டில் ஹைட்ராலிக் ரேம்ப் (சக்கர நாற்காலி மின்தூக்கி) வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் இயக்கம் பேருந்தின் உதவியாளர் பயன்படுத்தும் வகையில் பேருந்தின் பின்பக்க கதவு அருகே தனியாக பொத்தான் அமைக்கப்பட்டுள்ளது. இவைத் தவிர, பேருந்தில் பயணிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் சீட் பெல்ட், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் தானியங்கி கதவு ஆகிய வசதிகளுடன் பேருந்தினுள் கண்காணிப்பு கேமரா, ஏ.சி. உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சிறப்பு பேருந்து வாங்க மும்பை ஙன்ப்ற்ண் இர்ம்ம்ர்க்ண்ற்ஹ் உஷ்ஸ்ரீட்ஹய்ஞ்ங் ர்ச் ஐய்க்ண்ஹ கண்ம்ண்ற்ங்க் (எம்சிஎக்ஸ்) என்ற நிறுவனம் நிதியுதவி வழங்கியது. இந்தப் பேருந்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் பேருந்தில் ஏற, இறங்க இயலாத நிலையில் உள்ள குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். தமிழகத்திலேயே முதல்முறையாக இத்தகைய சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட பள்ளிப் பேருந்து இதுவாகும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...