ஆண்களின் இனப்பெருக்கத் திறன் 2060 -ஆம் ஆண்டுக்குப் பிறகு இருக்காது என்று சொல்கிறது அதிரவைக்கும் ஆய்வு!
டாக்டர் ஷன்னா ஸ்வான் என்ற இனப்பெருக்க இயல் நிபுணர் தான் எழுதி இருக்கும் "கவுண்ட் டவுன்' (இஞமசப ஈஞரச) என்ற நூலில் அடுத்த ஒரு சில தலைமுறைகளில் ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை கருவுறுதலுக்குப் போதுமானதாகக் கருதப்படும் அளவை காட்டிலும் குறைந்து விடும் அல்லது முற்றிலும் இல்லாமல் போகக்கூடும் என்ற அதிரவைக்கும் கணிப்பைக் கூறியிருக்கிறார். உலகின் மக்கள் தொகை அதிரடியாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுவருகிறது என்றும் ஷன்னா ஸ்வான் எச்சரித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஆண்களின் உயிர் அணுக்களின் குறைபாடு கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 50 சதவிகிதம் குறைந்து விட்டது என்பதற்கான ஆதாரங்களைப் பல ஆய்வுகளின் மூலமாகத் திரட்டி தனது நூலில் இடம்பெறச் செய்திருக்கிறார். இந்திய மக்கள் மத்தியில் இனப் பெருக்க பிரச்னைகள் அதிகமாகி வருகின்றன. இதற்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு மருத்துவமனைகள் வீதிக்கு ஒன்று பெருகிவருவதே சான்று. டாக்டர் ஷன்னா ஸ்வான் தனது ஆய்வினை மேற்கத்திய ஆண்களோடு நிறுத்திக் கொண்டுள்ளார். ஆனாலும், மாறிவிட்ட சூழ்நிலையில், அவரது ஆய்வுகள் இந்தியாவிற்கும் பொருந்தும்.
"ஆண்களின் உயிர் அணுக்களின் எண்ணிக்கை 1990 -ஆம் ஆண்டில் இருந்தே குறையத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் ஆண்மைக் குறைபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. இதைதான் நான் "இறங்கு முகம்' என்று பெயரிட்டுள்ளேன். 2045 வாக்கில் முதல் குழந்தையை உருவாக்கவே இனப்பெருக்க முறைகளின் உதவிகளை நாட வேண்டிய நிலை உருவாகிவிடும்.
இன்றைய தலைமுறை இளைஞர்களுக்குத் தங்களின் தாத்தாக்களுக்கு இருந்த உயிர் அணுக்களின் எண்ணிக்கையில் பாதிதான் இருக்கிறது. இனி வரும் ஆண்டுகளில் இது குறைந்து கொண்டே போகும். 2060 -ஆம் ஆண்டு முதல் ஆண்களின் இனப்பெருக்கத் திறன் மிகக் குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலே போகலாம்.
"ஆண்களிடம் இனப்பெருக்கக் குறைபாடு ஏற்படுவதற்குப் பல காரணிகள் இருந்தாலும், நம்மிடையே ஏற்பட்டிருக்கும் வாழ்வியல் மாறுபாடே முக்கிய காரணம். மாறிவிட்ட உணவு முறை காரணமாக உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், இரவில் அதிக நேர வேலை அல்லது கண் விழிப்பு, மது அருந்துதல், ஆண்களின் உயிர் அணுக்கள் குறைபாட்டிற்கு இதர முக்கியக் காரணங்கள் ஆகும்.
குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று, பயன்படுத்தும் அழகுப் பொருள்கள் போன்றவற்றில் கலந்திருக்கும் நச்சு வேதியியல் பொருள்கள் நம் உடலை பாதிக்கின்றன. இந்தப் பொருள்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுவிட்டான். பெண்களின் நிலையும் அத்தனை பாதுகாப்பானது என்றும் சொல்ல முடியாது. கர்ப்ப காலத்தில் தாயின் மூலமாக கருவுக்கு வேதியியல் பொருள்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
உலகில் வருவதற்கு முன்னரே கருவில் இருக்கும் குழந்தையும் வேதியல் அபாயத்தைச் சந்தித்துவிடுகிறது. சுருக்கமாகச் சொன்னால் துணி வெளுக்கும் சலவைப் பொருள்களிலிருந்து பயிர்களுக்குப் பயன்படுத்தும் ரசாயன உரங்கள், புழக்கத்தில் இருக்கும் பிளாஸ்டிக், மனிதனின் ஹார்மோன் செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. மனிதனைத் தொடர்ந்து, மிருகங்களும் இனப்பெருக்கக் குறைபாட்டினை நேரிட்டு வருகின்றன'' என்கிறார் டாக்டர் ஷன்னா ஸ்வான். இவர் நியூயார்க் நகரில் வாழ்ந்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


