இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விண்வெளி சுற்றுலா

விண்வெளி சுற்றுலா , நாசா உட்பட பல விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களின் கனவாக இருந்து வந்தது. அது விரைவில் நனவாகப் போகிறது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:30 am

பிஸ்மி பரிணாமன்

விண்வெளி சுற்றுலா , நாசா உட்பட பல விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களின் கனவாக இருந்து வந்தது. அது விரைவில் நனவாகப் போகிறது.
சர்வதேச நாடுகளில் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான "அமேசான்'னின் நிறுவனரான ஜெப் பெúஸாஸ், "புளூ ஆர்ஜின்' என்ற விண்வெளி நிறுவனத்திற்கும் சொந்தக்காரர். இந்த நிறுவனத்தின் லட்சியம், மனிதர்களை விண்வெளிக்குக் கொண்டு சென்று சுற்றிக் காட்டி மீண்டும் பூமிக்குத் திரும்புவது என்பதாகும். வரும் ஜூலை 20- இல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து "நியூ ஷெப்பர்ட் பூஸ்டர்' என்று பெயரிட்ட விண்கலத்தை விண்ணில் செலுத்தவுள்ளது.
பயணிகளும் பயணிக்கும் இந்த "விண்வெளி சுற்றுலா', விண்வெளி சரித்திரத்தில் "முதல் விண்வெளி சுற்றுலா' பயணமாக இடம் பிடிக்கும். இந்தப் பயணத்தில் ஜெப் பெசோஸ்ஸூடன் அவரது சகோதரர் மார்க் சேர்ந்து பயணிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து பயணிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்கலத்தில் இடம் பிடிக்க ஏலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. யார் அதிகமான தொகை தருகிறார்களோ அவர் இந்த விண்வெளி சுற்றுலாவில் சேர்ந்து கொள்ளலாம்.
ஆறு பேர்கள் மட்டுமே பயணிக்கும் இந்த விண்வெளிப் பயணத்தில், முதல் இரண்டு இருக்கைகள் ஜெப் பெúஸாஸ், மார்க்கிற்கு ஒதுக்கப்பட்டு
விட்டது. மூன்றாவது இருக்கையில் அமர்ந்து பயணிக்க, ஏலம் தொடங்கியதும் 143 நாடுகளில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இறுதியில் ஒருவர் 28 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடி) கொடுத்து மூன்றாவது இருக்கையை சொந்தமாக்கிக் கொண்டுள்ளார்.
சரி... விண்வெளி சுற்றுலா பயணத்தில் எத்தனை நாள்கள் விண்ணில் பறக்க வேண்டிவரும் என்று யோசிக்கிறீர்களா..?
ஒரு நாள்.. ஏன் ஒரு மணி நேரம் கூட விண்வெளியில் வலம் வர முடியாது. வெறும் பத்து நிமிடம் விண்வெளியில் சுற்றி வரலாம்.. பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட எல்லையான கார்மன் கோட்டிற்கு மேலே பயணிகள் நான்கு நிமிடங்கள் பறப்பார்கள்..
விண்வெளி சுற்றுலா திட்டத்தில் ஜெப் பெúஸாவுடன் போட்டியாகக் களத்தில் நின்றவர்கள் எலான் மஸ்க், ரிச்சர்ட் பிரான்சன். இந்த மூவரும் பல்லாயிரம் கோடி டாலர்களைக் விண்கல வடிவமைப்பு ஆராய்ச்சியில் கொட்டி இருந்தாலும், முந்திக் கொண்டது ஜெப் பெúஸாஸ் மட்டுமே. விண்வெளி சுற்றுலாவுக்குப் பயன்
படுத்தப்படும் "நியூ ஷெப்பர்ட் பூஸ்டர்' கலம் 15 சோதனை பயணங்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் அந்த சோதனைப் பயணத்தில் மனிதர்கள் சென்றிருக்கவில்லை. "நியூ ஷெப்பர்ட் பூஸ்டர்' கலம் பூமியிலிருந்து 100 கி. மீ உயரத்தில் பறக்கும்.
மிக விரைவாகச் செல்லும் கான்கார்ட் விமானம் பூமிக்கு மேலாக 18 கி. மீ தூரத்தில் பறக்கும். விண்வெளியில் பறக்கும் போது மனிதர்களின் உடல் எடை குறைவதாகத் தோன்றும். அந்த அனுபவத்தை "நியூ ஷெப்பர்ட் பூஸ்டர்' பயணிகள் பெறுவார்கள்.
பூமியையும் விண்கலத்திலிருந்து பார்க்கலாம்.
வரும் நாள்களில் விண்வெளி சுற்றுலாவில் பங்கு கொள்ள விரும்புபவர் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்களைக் கட்டணமாகத் தர வேண்டும். இது இந்திய பண மதிப்பில் சுமார் ஒன்றரை கோடி ஆகும்.
"எனக்கு ஐந்து வயதிலிருந்தே, விண்வெளிக்கு பயணிக்க வேண்டும்.. விண்வெளியில் வலம் வர வேண்டும் என்று கனவு கண்டேன். ஜூலை 20- ஆம் தேதி, எனது சகோதரருடன் அந்தப் பயணத்தை மேற்கொள்வேன்' என்று பெúஸாஸ் ஒரு இன்ஸ்ட்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.