ஜப்பான் தபால்தலையில் இடம்பெற்ற தமிழர்
தமிழில் இருந்தே ஜப்பானிய மொழி தோன்றியிருக்கக் கூடும் என்ற வரலாற்று ஆதாரங்கள் இருப்பதைப் போன்றே தமிழர் நாகரிகத்துக்கும் ஜப்பானிய நாகரிகத்துக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் காணப்படுகின்றன. தமிழகத்தில் அற


தமிழில் இருந்தே ஜப்பானிய மொழி தோன்றியிருக்கக் கூடும் என்ற வரலாற்று ஆதாரங்கள் இருப்பதைப் போன்றே தமிழர் நாகரிகத்துக்கும் ஜப்பானிய நாகரிகத்துக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் காணப்படுகின்றன. தமிழகத்தில் அறுவடைத் திருவிழா (பொங்கல்) கொண்டாடப்படுவதைப் போலவே ஜப்பானிலும் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
ஜப்பானில் உள்ள யாயோய் கல்லறைகளும் தமிழகம் மற்றும் வடஇலங்கையில் உள்ள கல்லறைகளும் ஒத்துப்போகின்றன. ஜப்பானிய மொழியை கொரிய, சீன மொழிகளுடன் ஒப்பிட்ட டோக்கியோவைச் சேர்ந்த மொழியியல் அறிஞர் சுசுமு ஓனோ, தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் ஒற்றுமை இருப்பதை முதலில் உலகிற்கு உணர்த்தினார். இந்நிலையில் ஓமலூரைச் சேர்ந்த முதியவர் சொ.மு.முத்து (91) தமிழ் மொழி பரிமாற்றத்துக்குப் பல்வேறு முயற்சிகளை செய்துள்ளார்.
இனி அவருடனான சந்திப்பிலிருந்து:
கடந்த 1981-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மதுரையில் நடைபெற்ற 5-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான தமிழ் அறிஞர்கள், மொழி ஆராய்ச்சியாளர்கள் வந்திருந்தனர். அதேபோல் ஜப்பானின் ஷூமாடா நகரில் வசிக்கும் சுúஸô மாட்சுனாகா (91) என்பவரும் ஒரு "ஜப்பானியன் பார்வையில் திருக்குறளும் திருவள்ளுவரும்' என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார்.
ஜப்பானில் அரசு அங்கீகரிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளரான சுúஸô மாட்சுனாகா, ஜப்பானிய மொழியின் மூலத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் மொழி ஆய்வு செய்து வந்தார். இதற்கிடையே இவருடைய பேனா நண்பராக என்னுடைய மகன் எம்.சேகர் (64) கடந்த 1980-ல் அறிமுகமானார்.
மாநாட்டுக்காக 1981-ல் தமிழகம் வந்த சுúஸô மாட்சுனாகா தனது பேனா நண்பரின் முகத்தைக் காண்பதற்காக எங்கள் வீட்டுக்கு வந்தபோது, என்னை சந்தித்தார். நாங்கள் இருவரும் இலக்கியம், திருக்குறள், தமிழ் கலாசாரம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது பாரதியார் குறித்து பேச்சு எழுந்தது. எனது மகன் முகம் பார்க்காமல் நட்பு பாராட்டிய சுúஸô, என் முகத்தைப் பார்த்ததும் என்னிடமும் நட்புப் பாராட்ட ஆரம்பித்தார். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது பாரதியைக் கேள்விப்பட்ட சுúஸô, அவர் தொடர்பான ஆங்கிலப் புத்தகங்களைக் கேட்டார்.
இதையடுத்து அவருக்கு "குயில்பாட்டு' ஆங்கில மொழி பெயர்ப்பு நூலையும் பாரதி குறித்த நூல்களையும் தபாலில் அனுப்பினேன். இந்த நூலில் இருந்த தமிழ் வார்த்தைகளுக்கான அர்த்தங்கள், சந்தேகங்களை ஆங்கிலத்தில் கடிதமாக எழுத, அதற்கு பதில் கடிதத்தை நான் ஜப்பானுக்கு அனுப்பினேன். இந்த கடிதப் போக்குவரத்து கடந்த 30 ஆண்டுகளாக இப்போதும் தொடர்ந்து வருகிறது.
பாரதியை நன்கு கற்றுத் தேர்ந்த சுúஸô, ஜப்பானின் ஜப்பானிய மொழியில் "சுப்பிரமணிய பாரதியின் குயில்பாட்டு, இதர பாடல்கள்' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டார். இதன் தாக்கமாகவே டோக்கியோவில் 1982 ஏப்ரல் 6-ல் பாரதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
இதைத் தொடர்ந்து பஞ்சதந்திர கதைகள், வள்ளலாரின் மணிமொழிகள், மணிமேகலை, நாலடியார் ஆகியவற்றின் ஆங்கிலப் பதிப்புகளை அனுப்பி, உரிய விளக்கத்தை கடிதத்தில் அனுப்ப அவற்றையும் ஜப்பான் மொழியில் மொழி பெயர்த்தார் சுúஸô. ஜப்பான் மொழியில் வெளியான "வள்ளலாரின் குரல்' என்ற நூலின் வெளியீட்டு விழா 1986 ஜனவரியில் வடலூரில் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், ஊரன் அடிகளார் முன்னிலையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழக கலை, இலக்கிய, கலாசாரம், திருமண முறை போன்றவற்றை அறிந்து கொள்ள விரும்பினார் சுúஸô மாட்சுனாகா.
என்னுடைய உதவியுடன் திருமண விழாக்கள், கோயில் திருவிழாக்கள் குறித்து கடிதம் மூலம் அனுப்பிய தகவல்களைத் தொகுத்து, எனது கடிதங்களில் இந்தியாவைப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் 4 நூல்களை ஜப்பானிய மொழியில் வெளியிட்டு, அதன் பிரதிகளையும் எனக்கு அனுப்பினார்.
ஜப்பான் நண்பருடன் ஏற்பட்ட தொடர்பால் "ஜப்பானிய தேவதை'க் கதைகள் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.
இந்திய கலாசாரத்தை சுúஸô மாட்சுனாகா மூலம் ஜப்பானியர்கள் அறிந்து கொள்ள உதவியமைக்காக கடந்த 2007 ஆகஸ்டில் ஜப்பான் அரசாங்கம் எனக்கு தபால் தலை வெளியிட்டது.
படங்கள்: விஜயகுமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...