தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கந்தசாமியும் கிளியும்!

கடைத்தெருவுக்குப் போன கந்தசாமி, ஒரு கடையில் கிளி விற்பதைப் பார்த்தான். ஆதை வாங்க ஆசைப்பட்டான். கடைக்காரனிடம், ""கிளி என்ன விலை?'' என்று கேட்டான்.

News image
Updated On :30 ஜனவரி 2021, 12:30 am


கடைத்தெருவுக்குப் போன கந்தசாமி, ஒரு கடையில் கிளி விற்பதைப் பார்த்தான். ஆதை வாங்க ஆசைப்பட்டான். கடைக்காரனிடம், ""கிளி என்ன விலை?'' என்று கேட்டான்.

""நூறு ரூபாய்!!'' என்றான் கடைக்காரன்.

""ஒரு கிளிக்கு நூறு ரூபாயா?'' என்று கேட்டான் கந்தசாமி.

""அந்தக் கிளியிடமே விசாரித்துப் பார்!'' என்றான் கடைக்காரன். 

கந்தசாமியும் கிளியிடம், ""கிளியே!.... உன் விலை நூறு ரூபாயா?'' என்று கேட்டான். 

""அதில் என்ன சந்தேகம்?'' என்றது கிளி. 

அட!.... கிளி இவ்வளவு நன்றாகப் பேசுகிறதே!.... அப்படியானால் நூறு ரூபாய் கொடுக்க வேண்டியதுதான்! .... என்று பணத்தைக் கொடுத்து கிளியை வாங்கிக்கொண்டு போனான் கந்தசாமி.

ஆனால் வீட்டுக்குப் போய் கிளியிடம், ""உன்னை கூண்டில் வளர்க்கப்போறேன்!'' என்றான் கந்தசாமி.

""அதில் என்ன சந்தேகம்?''

""உனக்கு ஒரு பேர் வைக்கவா?''

""அதிலென்ன சந்தேகம்?''

இப்படி எதற்கெடுத்தாலும், "அதிலென்ன சந்தேகம்?' என்ற வார்த்தையைத் தவிர அதற்கு வேறு ஒன்றும் பேசத் தெரியவில்லை! கந்தசாமிக்கு எரிச்சலாகிவிட்டது!

""போயும், போயும் இந்தக் கிளியை நூறு ரூபாய் கொடுத்து வாங்கினேனே!.....

நான் ஒரு முட்டாள்!'' என்று சலிப்புடன் சொன்னான் கந்தசாமி. 

உடனே கிளி, ""அதிலென்ன சந்தேகம்?'' என்று சொன்னது.

நீதி: கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதும் பொய்.

( "நித்தம் ஒரு நீதிக்கதை' என்னும் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.