பாதுகாப்பாய் நாமிருப்போம்!
கருப்புப் பாயை விரித்ததுபோல்சாலை இருக்குது! ஓடும்காரு, வண்டி ஏதுமின்றி


கருப்புப் பாயை விரித்ததுபோல்
சாலை இருக்குது! ஓடும்
காரு, வண்டி ஏதுமின்றி
ஓய்ந்திருக்குது!
பரப ரப்பு ஏதும் இன்றி
ஊர்இருக்குது! நம்மைப்
பாதுகாக்க முகக் கவசம்
காத்திருக்குது!
இருப்பிடத்தை விட்டுவிட்டு
வெளியில் வராமல் - வீட்டில்
இருப்பதனால் நோயின் தொற்றும்
குறைந்தி ருக்குது!
மருத்துவமும் அரசும் நம்மைக்
காத்திருக்குது! நாமும்
மறந்தி டாமல் கைகழுவச்
சோப்பிருக்குது!
மறுத்திடாமல் வீட்டுக்குள்நாம்
இருப்பதனாலே நோயும்
மறைந்துவிடும் சீக்கிரத்தில்!
பயமும் இல்லையே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...