தேவையான பொருள்கள்:
பழுத்த தக்காளி- 2 கிலோ
சர்க்கரை- அரை கிலோ
மைதா மாவு, நெய்- தலா கால் கிலோ
தேங்காய்ப் பால்- 4 கிண்ணம்
முந்திரி, திராட்சை சேர்த்து- 50 கிராம்
ஏலக்காய்த் தூள்- 1 தேக்கரண்டி
எசன்ஸ்- 50 மில்லி
செய்முறை:
சூடான தண்ணீரில் தக்காளியை ஊற வைத்து, மேல் தோலை நீக்கிவிட்டு மிக்ஸியில் அரைத்துத் தனியே வைக்கவும். மைதா மாவை சலித்தவுடன் தேங்காய்ப் பால், சர்க்கரை, ஏலக்காய்த் தூளை நன்கு கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, சூடானவுடன் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுக்கவும்.
அரைத்த தக்காளி கூழை ஊற்றி 10 நிமிடங்கள் கிளறவும். பின்னர், மைதா மாவு, தனியாவைச் சேர்த்து நெய் சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். முக்கால் பதம் வந்தவுடன் முந்திரி, திராட்சை, எசன்ஸ் ஊற்றி, அல்வா பதம் வரும்வரை கிளறவும். ஒரு ட்ரேயில் நெய் தடவி ஊற்றி, ஆறியவுடன் சிறு துண்டுகளாக வெட்டவும்.
சியாமளா பாலு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







