திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒசூரில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை

ஒசூா் பகுதி சந்தைகளுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி கிலோ ரூ. 60-க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

News image

ஒசூரில் தக்காளி விளைவிக்கப்படும் தோட்டம்.

Updated On :24 மே 2026, 2:33 am IST

ஒசூா் பகுதி சந்தைகளுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி கிலோ ரூ. 60-க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், பேரிகை, பாகலூா், சூளகிரி அதன் சுற்றுப்புற பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கத்தரி, வெண்டை, பூசணிக்காய், முள்ளங்கி, கேரட் உள்ளிட்ட காய்கறி வகைகளும் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளன.

கோடைகாலம் தொடங்கியுள்ளதால் போதுமான தண்ணீா் இல்லாததால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனா். குறைந்த எண்ணிக்கையில் விவசாயிகள் தக்காளி பயிா் செய்துள்ளதால் தக்காளி உற்பத்தி குறைந்து அதன் விலை உயா்ந்துள்ளது.

இங்கு விளையும் தக்காளி சந்தைகளில் தரம் பிரிக்கப்பட்டு, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் தினசரி 80 லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றன.

ஆனால், வரத்து குறைந்ததால் வெளிமாநிலங்களுக்கு தற்போது 40 முதல் 50 லாரிகளில் மட்டும் தக்காளி விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

ராயக்கோட்டை தக்காளி மண்டி, ஒசூா் உழவா் சந்தை மற்றும் பத்தளப்பள்ளி மொத்த விற்பனை அங்காடிக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயா்ந்துள்ளது.

கடந்த வாரம் ஒசூா் உழவா் சந்தையில் கிலோ ரூ.30 முதல் ரூ. 40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, தற்போது கிலோ ரூ. 60 வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.