நாவல் பழத்தின் கொட்டைகளைக் காய வைத்து, தோலை நீக்கிவிட்டு பருப்பை எடுத்து தூளாக்கி, தினமும் ஒரு சிட்டிகை வாயில் போட்டுக் கொண்டு, தண்ணீர் குடித்து வந்தால் சர்க்கரை வியாதி கட்டுப்படும்.
துவரம் பருப்பை வேக வைக்கும்போது, தேங்காய்த் துண்டு ஒன்றை நறுக்கிப் போட்டால் பருப்பு விரைவில் வெந்துவிடும். வெண்ணெய் போல் குழைவாகவும் இருக்கும்.
தக்காளி சரியாகப் பழுக்காவிட்டால், ஒரு பாலித்தீன் பையில் போட்டு கட்டி வைத்தால் மறுநாள் நன்றாகப் பழுத்துவிடும்.
வெந்தயக் கீரையில் வைட்டமின் 'ஏ' சுண்ணாம்புச் சத்து நிறைய உள்ளன. அடிக்கடி இதைச் சமைத்துச் சாப்பிட்டால், ரத்தத்தைப் பெருக்கும். எலும்புகள் வலுப்பெறும்.
ஆலமர இலைகளைச் சூடுபடுத்தி, அதன் மேல் எள் எண்ணெய் கலந்து வீக்கத்தின் மீது கட்டினால் வீக்கம், காயம், கொப்புளங்கள் குணமாகிவிடும்.
ஆலம்பழத்தை நிழலில் உலர்த்திச் சாப்பிட்டால், ஞாபகச் சக்தி பெருகும்.
பச்சை மிளகாயை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு, அத்துடன் சிறிது மஞ்சள் தூளையும் சேர்த்து காற்று புகாமல் இறுக்கி மூடிவிட்டால், பச்சைமிளகாய் ஒரு வாரம் வரை வாடாமல், வதங்காமல் இருக்கும்.
சிறிதளவு உப்பை மெழுகுவர்த்தி மீது நன்றாகத் தேய்த்துவிட்டு பின்னர் எடுத்து பற்றவைத்தால், வெளிச்சமும் கூடும். விரைவில் உருகாமலும் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






