மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திடீர் ஊத்தப்பம்

உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக அரியவும்.

News image

திடீர் ஊத்தப்பம்

Updated On :15 மார்ச் 2026, 12:59 pm

கே.நாகலட்சுமி

தேவையான பொருள்கள்:

வெள்ளை ரவை, உருளைக்கிழங்கு- தலா 200 கிராம்

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்- தலா 2

இஞ்சி- 1

கேரட், கொத்துமல்லி அரிந்தது - தலா ஒரு கைப்பிடி அளவு

கறிவேப்பிலை, உப்பு- தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக அரியவும். இதோடு, ரவை சேர்த்து ஒரு தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி, மிக்ஸியில் அரைக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்த்து நைசாக தோசை மாவு பதத்தில் அரைக்கவும்.

அதில் உப்பும், மற்ற பொருள்களையும் சேர்த்து கலந்து ஒரு சிட்டிகை சமையல் சோடாவைச் சேர்த்து நன்கு கலக்கவும். தாளிப்புக் கரண்டி அல்லது குட்டி வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஒரு கரண்டி மாவை ஊற்றி, மூடி வைத்து வெந்ததும் திருப்பிப் போட்டு மீண்டும் மூடிவைத்து 2 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். இதை உடனே தயாரிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.