லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஜவ்வரிசி முறுக்கு

பச்சரிசியைக் கழுவி காய வைத்து அரைத்து சலிக்கவும். தயிரில் ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊற விட வேண்டும்.

News image
Updated On :22 செப்டம்பர் 2024, 12:16 pm

தேவையான பொருள்கள்:

ஜவ்வரிசி- 400 கிராம்

பச்சரிசி- 750 கிராம்

தயிர்- 100 கிராம்

பெருங்காயம், மிளகாய்த் தூள்- தலா 1 தேக்கரண்டி

எள்- 1 மேசைக்கரண்டி உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியைக் கழுவி காய வைத்து அரைத்து சலிக்கவும். தயிரில் ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊற விட வேண்டும்.

ஊறியவுடன் தயிருடன் மாவில் கொட்டி உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயம், எள் போட்டு சிறிது சூடான எண்ணெய் விட்டு பிசைய வேண்டும்.

அடுப்பில் வாணலியில் வைத்து எண்ணெயை ஊற்றி நன்றாகக் காய்ந்ததும் முறுக்கு அச்சில் மாவு போட்டு, பிழிய வேண்டும். பொன்னிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.