எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திடீர் வி.ஐ.பி.யான சாமானியப் பெண்!

அபுதாபியில் அண்மையில்  நடைபெற்ற  கேரள கலைநிகழ்ச்சி ஒன்றில்,   குறும்பா என்ற  சாமானியப்  பெண் பங்கேற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:41 am

பிஸ்மி பரிணாமன்

அபுதாபியில் அண்மையில் நடைபெற்ற கேரள கலைநிகழ்ச்சி ஒன்றில், குறும்பா என்ற சாமானியப் பெண் பங்கேற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கேரள மாநிலத்துக்கு உள்பட்ட மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 'திருநாவாய்- எனும் ஊரைச் சேர்ந்தவர்கள் மொய்தீன் - ஆயிஷா தம்பதி. அவர்களது அடுத்த வீட்டில் வசித்தவர்கள் கோரன் - குறும்பா தம்பதி.

மதம் வேறாக இருந்தாலும் ஐம்பது ஆண்டுகளாகவே இரண்டு குடும்பங்களுக்கு இடையில் நட்பு உறுதியாக இருந்தது. சந்தோஷம், துக்க நிகழ்வுகளில் இரண்டு குடும்பத்தினரும் தங்களுக்கு ஏற்பட்டதாக கருதி வாழும் அளவுக்கு புரிதல் ஏற்பட்டிருந்தது.

மொய்தீன் - ஆயிஷா தம்பதியருக்கு பத்து பிள்ளைகள். இந்தக் குழந்தைகளுக்கு வளர்ப்புத் தாயாக அவதாரம் எடுத்தது குறும்பா. அதனால் குழந்தைகள் பராமரிப்பும் வளர்ப்பும் சிரமமாகவோ, சுமையாக ஆயிஷாவுக்கு தெரியவில்லை. பெரும்பாலான நேரங்களில் அந்தக் குழந்தைகள் குறும்பாவின் வீட்டில்தான் இருப்பார்கள்.

மொய்தீன் - ஆயிஷா பிள்ளைகள் பெரியவர்களாகி வேலைகளுக்குச் சென்றதும் அந்தக் குடும்பத்தின் பொருளாதாரம் மேம்பட்டது. அதிலும் மூத்த மகன் அப்துல் அஜீஸ் அபுதாபிக்குச் சென்றது அந்தக் குடும்பத்துக்கே ஏணியாக அமைந்தது. பணம் வந்தும் கூட இரண்டு குடும்பங்களின் நெருக்கம் இன்னும் அதிகமானது.

இந்த நிலையில், அப்துல் அஜீஸ் அபுதாபியில் தொழில் முனைவராக மாறினார். மொய்தீன் மரணம் அடைந்து சில ஆண்டுகளானதும், தாய் ஆயிஷாவை தன்னுடன் அபுதாபிக்கு அழைத்து சென்றார்.

விடுமுறைக்கு அபுதாபியிலிருந்து திருவாய் செல்லும்போது ஆயிஷாவும் குறும்பாவும் பேசிப் பேசியே விடுமுறையை கழிப்பார்கள். வளைகுடா நாடுகளின் சிறப்பை, வாழ்க்கை முறையைச் சிலாகித்து ஆயிஷா சொல்வதை குறும்பா அகமகிழ்ந்து கேட்பார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆயிஷா தனது மரணத் தருவாயில் இருந்தபோது அஜீஸிடம் ''நம்ம குடும்பத்துக்கு எத்தனையோ செய்திருக்கும். உங்களை எல்லாம் வளர்த்திருக்கும் குறும்பாவை அபுதாபி வரவழைத்து வளைகுடா நாடுகளைச் சுற்றிக் காண்பித்து அனுப்பிவை என்றார்.

'அதுதானே! இது எனக்குத் தோன்றவே இல்லையே! அம்மா முன்னமே சொல்லியிருந்தால் அம்மா இருக்கும்போதே வளர்ப்பு தாயையும் அழைத்து வந்திருக்கலாமே- என்று அஜீஸ் நினைத்தாலும் உடனே தாயின் ஆசையை நிறைவேற்ற இயலவில்லை.

அபுதாபியில் மலப்புரம்வாசிகளின் கலை கலாசார விழா நடைபெற உள்ளது என்பது நினைவுக்கு வந்ததும் , குறும்பாவை அழைக்கலாம் என்று அப்துல் அஜீஸ் முடிவு செய்து உரியவர்களிடம் அனுமதியும் பெற்றார். குறும்பாவுக்கு பாஸ்போர்ட், விசாக்களை எடுத்து குறும்பாவையும் அழைத்து வந்தார். விழாவில் குறும்பாவை அஜீஸ் அறிமுகப்படுத்த, அபுதாபி, கேரளா ஊடகங்களில் குறும்பா பிரபலமாகியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.