ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
1ஹேப்பி ராஜ்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ஹேப்பி ராஜ் படத்தில், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை கௌரி பிரியாவும் முக்கிய கதாபாத்திரங்களில் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் நாளை(ஏப். 24) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
2பிரதிச்சாயா

நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து வெளியான புதிய படம் பிரதிச்சாயா. இந்தப் படத்தை, இயக்குநர் பி. உன்னிகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.
பிரதிச்சாயா திரைப்படம் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
3லெச்சிந்தி மஹிலா லோகம்

தெலுங்கில் வெளியான நகைச்சுவைத் திரைப்படம் 'லெச்சிந்தி மஹிலா லோகம்''. இந்தப் படத்தில் மஞ்சு லட்சுமி, அனன்யா நாகல்லா, ஸ்ரீராம சந்திரா, ஹரி தேஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் தெலுங்கு, தமிழ் மொழிகளில் காணக் கிடைக்கிறது.
4நீ ஃபாரெவர்

அசோக் குமார் கலைவாணி இயக்கத்தில் சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் நீ ஃபாரெவர்.
இந்தப் படத்தை நாளை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.
5பேண்ட் மேளம்

ஹர்ஷ் ரோஷன், ஸ்ரீதேவி நடிப்பில் சதீஷ் ஜவ்வாஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பேண்ட் மேளம்.
இந்தத் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
6கடந்த வார ஓடிடி (யூத்)

கென் இயக்கி, நடித்த யூத் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
இந்தப் படத்தில் அனிஷ்மா, சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
7சம்பவம் அத்தியாயம் ஒன்னு

மலையாள மொழித் திரைப்படமான சம்பவம் அத்தியாயம் ஒன்னு படத்தை ஜித்து சதீசன் மங்களத்து எழுதி, இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அஸ்கர் அலி, வினீத் குமார், சித்தார்த் பரதன், செந்தில் கிருஷ்ணா, அசிம் ஜமால் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
8உஸ்தாத் பகத்சிங்

இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில், பவன் கல்யாண் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் உஸ்தாத் பகத் சிங். மேலும், இந்தப் படத்தில் ஸ்ரீலீலா, ராஷி கன்னா, பார்த்திபன், ராவ் ரமேஷ், கே.எஸ். ரவிகுமார், கெளதமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பார்க்கலாம்.
9போச்சம்மா

தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டுள்ள திரில்லர் இணையத் தொடர் போச்சம்மா.
இந்த இணையத் தொடரை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஆஹா ஓடிடியில் பார்க்கலாம்.
10மா இன்டி கதா

குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இணையத் தொடர் மா இன்டி கதா.
இந்த இணையத் தொடரை ஈ டிவி வின் ஓடிடி தளத்தில் காணலாம்.
Summary
You can see which movies and web series are releasing this week on OTT platforms.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!

ஓடிடியில் தாய் கிழவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

சப்தம் முதல் முத்து என்கிற காட்டான் வரை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



