டிப்ஸ்.. டிப்ஸ்..
கடலைப் பருப்பை லேசாக வறுத்து, பிறகு வேக வைத்து மிக்ஸியில் அரைத்து வெல்லம், ஏலக்காய்த் தூள், திராட்சை, முந்திரி போட்டு பாயசம் செய்யலாம்.


கடலைப் பருப்பை லேசாக வறுத்து, பிறகு வேக வைத்து மிக்ஸியில் அரைத்து வெல்லம், ஏலக்காய்த் தூள், திராட்சை, முந்திரி போட்டு பாயசம் செய்யலாம்.
தோசை மாவில் சிறிதளவு தேங்காய்ப் பாலைக் கலந்து தோசை வார்த்தால் மணமும் சுவையும் கூடுதலாக இருக்கும்.
எலுமிச்சை ஊறுகாய் போடும்போது, ஊறுகாய்த் துண்டுகளுடன் ஓரிரு இஞ்சித் துண்டுகளை வதக்கி அத்துடன் போட்டு வைத்தால் ஊறுகாயின் சுவை கூடுதலாகும்.
ரசம் வைத்தவுடன் அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை போட்டுக் கலந்து வையுங்கள். ரசம் மிகவும் சுவையாக இருக்கும்.
கேசரி செய்யும்போது தண்ணீரைக் குறைவாகச் சேர்த்து அந்த அளவுக்குப் பாலை அதிமாகச் சேர்த்துச் செய்தால் கேசரி நன்கு மணமாகவும், புதுவிதச் சுவையாகவும் இருக்கும்.
ரவை உப்புமா தயார் செய்யும்போது, அதற்காக வைக்கும் தண்ணீரின் அளவு எவ்வளவோ அதில் பாதியளவு தண்ணீரும் பாதியளவு பால் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்துச் செய்தால் ருசி கூடுதலாகக் காணப்படும்.
சுவையான அவலுக்கு, அவலில் சிறிதளவு இளம் சூடு பாலைத் தெளியுங்கள். பின்பு அவலில் தேங்காய்த் துருவல், சர்க்கரை ( சீனி) ஏலக்காய்த் தூள் போன்றவை கலந்தால் அதிக சுவை கிடைக்கும்.
பிரியாணிக்காக இறைச்சியை வேக வைப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே அதில் தயிர், இஞ்சி, பூண்டு, அரைத்து மசாலா கலந்து வைத்து விடுங்கள். நல்ல ருசி கிடைக்கும்.
அடை சுடும்போது உருளைக்கிழங்கை வேகவைத்து சேர்த்தாலும் பருப்பை வறுத்துப் பொடி செய்து சேர்த்தாலும் அடை ருசியாக இருக்கும்.
காலிஃபிளவர் வேக வைக்கும் நீரில் இரண்டு தேக்கரண்டி பால் சேருங்கள். காலிஃப்ளவர் நல்ல நிறத்துடன் இருக்கும்.
துவரம் பருப்பை வேக வைக்கும்போது தேங்காய் துண்டு ஒன்றை நறுக்கிப் போடுங்கள். பருப்பு விரைவில் வெந்துவிடும். வெண்ணெய்யைப் போல் குழைவாகவும் இருக்கும்.
இட்லிக்குத் தேங்காய் சட்னி அரைக்கும்போது இரண்டோ மூன்றோ புதினா இலைகளைச் சேர்த்து அரைக்கவும். நல்ல சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...