

முட்டை தொக்கு

தேவையான பொருட்கள்:
முட்டை - 3
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 12 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
வறுத்து அரைப்பதற்கு...
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தக்காளி - 1 (நறுக்கியது)
வரமிளகாய் - 2-3
சின்ன வெங்காயம் - 10
மல்லி - 1 தேக்கரண்டி
பட்டை - 1 சிறிய துண்டு
ஏலக்காய் - 1
சோம்பு - 12 தேக்கரண்டி
கசகசா - 12 தேக்கரண்டி
மிளகு - 12 தேக்கரண்டி
செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் பேனை வைத்து, அதில் முட்டையை வைத்து, அதன் மேல் மிளகாய்த் தூள், கரம் மசாலா
மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, பின் அதனை கொதித்துக் கொண்டிருக்கும் மசாலாவில் சேர்த்து 2 நிமிடம் முட்டையில் மசாலா சேரும் வரை நன்கு வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், முட்டை தொக்கு ரெடி.
***
மட்டன் கோலா உருண்டை.

தேவையான பொருட்கள்:
மட்டன் கைமா - 750 கிராம்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
துருவிய தேங்காய் - 3/4 கிண்ணம்
முட்டை - 1
பச்சை மிளகாய் - 7 (நறுக்கியது)
பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை - 1 சிறிய துண்டு
இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கியது)
பூண்டு - 10 பற்கள் (நறுக்கியது)
மஞ்சள் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை: முதலில் மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்
கடலை மற்றும் கசகசா சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு தாளித்து, பின்பு அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்கு வதக்கி, பிறகு மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், ஒரு பாத்திரத்தில் மட்டன் கைமா, முட்டை, தேங்காய் விழுது மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் உருண்டைகளாகப் பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மட்டன் கோலா உருண்டை ரெடி.
****
இறால் சில்லி 65

தேவையான பொருட்கள்:
இறால் - 20
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
மசாலாவிற்கு
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
சோள மாவு - 14 கிண்ணம்
கொத்துமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - சிறிது
செய்முறை: முதலில் இறாலை தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மசாலாவிற்கு கொடுத்துள்ளவற்றை சேர்த்து நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடேற்றி இறால் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இறால் சில்லி 65 ரெடி
***
சுறா புட்டு

தேவையான பொருட்கள்:
சுறா மீன் - 250 கிராம்
தண்ணீர் - 2 டம்ளர்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 14 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
பெரிய பூண்டு - 2 ( பூண்டு நிறைய இருக்க வேண்டும்)
உப்பு - தேவையான அளவு
செய்முறை: சுறா மீனை அலசிவிட்டு 2-3 துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு மீன் முழுகும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். 2 விசில் வந்ததும் இறக்கிவிடலாம். பின்னர், நீரை வடிகட்டி மீன் துண்டுகளை எடுத்து தோல் மற்றும் எலும்புகளை நீக்கிவிட்டு, உதிர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, பின் பூண்டு பல்களைப் சேர்த்து வதக்கவும். பின்னர், வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து இஞ்சி பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் மஞ்சள்தூள் சேர்க்கவும். அத்துடன் உதிர்த்து வைத்துள்ள சுறா மீனைச் சேர்த்து மசாலா நன்கு மீனில் சேரும் வரை கிளறி விட்டு இறக்கினால், சுறா புட்டு ரெடி.
****
சீரக சம்பா மட்டன் பிரியாணி

தேவையான பொருள்கள்
சீரக சம்பா அரிசி - 1/4 கிலோ
மட்டன் - அரை கிலோ
இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 25 பல்
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
தயிர் - அரை கிண்ணம்
லெமன் - 1
புதினா - ஒரு கட்டு
மல்லித் தழை - ஒரு கட்டு
நெய் - அரை கிண்ணம்
எண்ணெய் - அரை கிண்ணம்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கிராம்பு - 3
பட்டை - 3 சிறிய துண்டு
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - 1 தேக்கரண்டி
செய்முறை: குக்கரில் மட்டன் போட்டு அத்துடன் கொஞ்சம் தயிர், மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து 5விசில் வரும் வரை வேக வைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். பூண்டை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் பூண்டு விழுதைப்போட்டு வதக்கவும். வெங்காயம் 2 நிமிடங்கள் வதங்கியதும், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர்,
நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் மீதமுள்ள தயிர் சேர்க்கவும்.
தேங்காயுடன் இஞ்சி, சேர்த்து மிக்ஸியில் அரைத்து தண்ணீர் ஊற்றி 4 கிண்ணம் பால் எடுத்து வைக்கவும். தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 8 கிண்ணம் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, மல்லித்தழை சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி 2 விசில் விட்டு குக்கரை இறக்கிவிடவும்.
பின்பு 10 நிம்டம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளறி விட்டு பரிமாறவும். சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

