சிறப்பாக வாழ
தினமும் வாழ்க்கை சுகமாகவும் மிகழ்ச்சியாகவும் இருக்கும் என கூற இயலாது. இருந்தாலும் கிடைத்த வாழ்க்கையைச் சுகமாக, மகிழ்ச்சியாக முடிந்த வரை கழிக்க, கீழ்காணும் எளிய வழிகள்


தினமும் வாழ்க்கை சுகமாகவும் மிகழ்ச்சியாகவும் இருக்கும் என கூற இயலாது. இருந்தாலும் கிடைத்த வாழ்க்கையைச் சுகமாக, மகிழ்ச்சியாக முடிந்த வரை கழிக்க, கீழ்காணும் எளிய வழிகள் இதோ...
வெளியே செல்ல முயற்சியுங்கள்
நமது மனதில் உள்ள வருத்தம். மற்றும் அழுத்தத்தை குறைக்க ஒரே வழி, வெளியே ஒரு ரவுண்டு வருவதுதான். வெளி வாழ்க்கை நமது மனதை மாற்றி அமைதியை தரும்.
மன்னிப்போம் மறப்போம்.
மனதில் பழிவாங்கும் எண்ணம் நமக்கே நல்லது செய்யாது. நமக்கு பாதிப்புகள் வந்திருக்கலாம். அது மற்றவரை விட கூடுதலாக இருந்திருக்கலாம். ஆனால் அதனை மனதில் வைத்துக் கஷ்டப்படுவதை விட மறப்பதே நல்லது. அதுமட்டுமல்ல மன்னித்து மறந்து விடுவோம்.
யோகா... செய்யுங்கள்...

அதன் மூலம் எவ்வளவு கலோரி குறையும் என யோசிக்காதீர்கள். மாறாக அதனை செய்வதின் மூலம், மனதில் ஒரு ரிலிஃப் இருப்பதை உணர்வீர்கள். யோகாவில் கடின பயிற்சிகள் வேண்டாம். மாறாக எளிய மெதுவாக மூச்சை இழுத்து, வெளிவிடும் பாணி பயிற்சிகளை செய்யுங்கள். அதுவே உங்கள் மனதில் அமைதியை தோற்றுவிக்கும். இதன் மூலம் புதிய தோழிகளும் உங்களுக்கு கிடைக்கலாம்.
உங்கள் ஆசையை செயல்படுத்துங்கள்.
உங்களுக்கு எழுதுவதிலா, வரைவதிலா விளையாடுவதிலா அல்லது வேறு ஏதாவது விரும்புகிறீர்களா என்பதை கண்டுபிடித்து, அதனைச் செயல் படுத்துங்கள்.
வாலண்டியராக மாறத் தயங்காதீர்கள்
அன்புக்கு ஆயிரம் வழி. மற்றவர்களை மகிழ்ச்சியாய் வைத்திருப்பதின் மூலம், உங்களுக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படுவதை உணரலாம். உங்களை விட மோசமான நிலையில் உள்ள தோழிகளுக்கு உதவுவதின் மூலம். திருப்தி பெற முடியும்.
காலையில் சீக்கிரம் எழுந்திருங்கள்.
அதிகாலையில் சீக்கிரம் எழுவதின் மூலம் கூடுதல் வேலை செய்ய முடியும். அதிகாலையில் எழுந்து, ஒரு காபியை குடித்துவிட்டு வேலையை ஆரம்பியுங்கள். நிச்சயம் நீங்கள் நினைத்ததை விட வேகமாக செயல்படுவதை நீங்களே உணரலாம்.
பாசிடிவ் நினைவு கொண்டவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.

சிலர் எப்போதும் முடியாது, நடக்காது என நெகடிவ்வாகவே கூறி கொண்டிருப்பர். இவர்களைத் தவிர்த்துவிடுங்கள். அதே சமயம், உன்னால் முடியும், நீ சாதிப்பாய் என சாதிக்க தூண்டுபவர்களை அருகில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்களோ என கவலை வேண்டாமே!
உங்களுக்கு, மற்றவர்கள், நம்மைப் பற்றி என்ன நினைப்பர் என்ற கவலையா? உங்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல். அவரவருக்கு ஆயிரம் பிரச்னைகள். ஆக நம்மைப்பற்றி கவலைப்பட அவர்களுக்கு நேரமில்லை என்பதை புரிந்து கொண்டு அந்த எண்ணத்தையே மூட்டைகட்டி, கண்காணாத இடத்துக்கு வீசுங்கள்.
கவலைப்படுவதை நிறுத்துங்கள்.
கவலைப் படுவதை நிறுத்துங்கள். ஒரு விஷயத்தில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்றால் அதுபற்றி கவலைப்பட்டு என்ன பயன்? நடப்பது நடந்தே தீரும் என்பதை புரிந்து கொண்டு கவலைப்படுவதற்கு குட்பை சொல்லுங்கள்.
அவ்வப்போது ஓய்வு அளியுங்கள்
எதெதில் உங்களுக்கு ஆர்வமோ, அத்துடன் முழுமூச்சாக அவற்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்களா? துணிந்து ஒரு வாரம் அவற்றிற்கு ஓய்வு கொடுங்கள். அந்த ஒரு வார ஓய்வுக்குப் பின் அதே வேலையை செய்து பாருங்கள். அதில் இன்னமும் சிறப்பாய் உழைப்பீர்கள்.
நன்றாக தூங்குங்கள்

நன்றாக தூங்குபவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். தினமும் இப்படி குறைந்தது 7 மணி நேரமாவது கண்டிப்பாக தூங்க வேண்டும்.
முடிந்த வரை சிரியுங்கள்.
சிரிப்பு சிறந்தது. சிரிப்பதின் மூலம், செரிடோனின் ( ஏஹல்ல்ஹ் ஏர்ழ்ம்ர்ய்ங்) என்ற ஹர்மோன் உற்பத்தியாகிறதாம். ஆக இதன் மூலம் உடம்பும் நன்றாக இருக்கிறதாம். ஆக சிரிப்பை தரும் அனைத்தையும், நினைவுபடுத்தி அல்லது பார்த்து ரசித்து சிரிக்க மறக்காதீர்கள்.
நன்றியை வரிசைப்படுத்துங்கள்
இன்று செய்தது என்ன? நாளை செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி தினமும் எழுதுங்கள். இது உங்களிடையே ஒரு பாசிடிவ் உணர்வை கொண்டு வந்து சேர்க்கும். வெற்றி நிச்சயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...