செவ்வாயில் ரைட் சகோதரர்களின் 'நினைவுகள்'
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள பெர்செவரன்ஸ் (விடா முயற்சி) விண்கலத்தின் ரோவர் (ஆய்வு வாகனம்) வெற்றிகரமாகத் தரையிறங்கி தனது ஆய்வுப் பணியையும்


அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள பெர்செவரன்ஸ் (விடா முயற்சி) விண்கலத்தின் ரோவர் (ஆய்வு வாகனம்) வெற்றிகரமாகத் தரையிறங்கி தனது ஆய்வுப் பணியையும் தொடங்கியுள்ளது.
இந்த ரோவருடன் ஒரு சிறிய ஹெலிகாப்டர் இணைக்கப்பட்டு உள்ளது. ரோவரின் வயிற்றுப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஹெலிகாப்டர் வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி தனது முதல் பயணத்தைத் தொடங்கவுள்ளது. அப்படி வெற்றிகரமாக பறந்தால் வேற்றுக் கிரகத்தில் பறந்த முதல் ஹெலிகாப்டர் என்ற பெருமையும் கிடைக்கும்.
இதில் இன்னொரு சுவாரசியமான விஷயமும் உள்ளது. 1903 - ஆம் ஆண்டு ரைட் சகோதரர்கள் இயக்கிய உலகின் முதல் விமானத்தில் இடம் பெற்ற மஸ்லின் துணியின் ஸ்டாம்ப் அளவு மாதிரி செவ்வாய் கிரக ஹெலிகாப்டரில் வைக்கப்பட்டுள்ளதாக நாசாவின் ஜெட் புரபல்ஸன் ஆய்வக இயக்குநர் பாபி பிரெளன் தெரிவித்துள்ளார்.
ரைட் சகோதரர்களின் சொந்த ஊரான ஒஹியோவில் உள்ள கரில்லன் வரலாற்றுப் பூங்காவானது நாசாவின் வேண்டுகோளுக்கு இணங்க, ரைட் சகோதர்களின் முதல் விமானத்தின் அடிப்பாக இடது இறக்கையிலிருந்து இந்த மஸ்லின் துணியின் மாதிரியை வழங்கியுள்ளது.
ரைட் சகோதரர்களின் ஆசியுடன் இந்தத் துணி மாதிரியானது 300 மில்லியன் மைல்கள் பறந்து செவ்வாயை அடைந்துள்ளதாக ரைட் சகோதரர்களின் வாரிசுகள் பெருமையுடன் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் ரைட் விமானத்தின் மரப்பலகை, துணி ஆகியவற்றின் சிறு பகுதிகள் 1969 - இல் நிலவுக்குச் சென்ற அப்பல்லோ ஐஐ விண்கலத்தில் இடம் பெற்றிருந்தன. இதேபோல் 1998- இல் விண்வெளிக்குச் சென்ற டிஸ்கவரி விண்கலத்திலும் இடம் பெற்றிருந்தன.
செவ்வாய் கிரகத்தில் பறக்கப்போகும் ஹெலிகாப்டர் 1.8 கிலோ எடை கொண்டது. சுமார் 3 மீட்டர் உயரத்துக்குப் பறந்து ஆய்வில் ஈடுபட உள்ளது. அந்த ஹெலிகாப்டரின் சோலார் பேனலில்தான் ரைட் சகோதரர்களின் விமானத்தில் இடம் பெற்ற துணி ஒட்டப்பட்டுள்ளது. ரைட் சகோதரர்களின் நினைவுகள் செவ்வாய் கிரகத்திலும் தடம் பதித்துள்ளது பெருமைக்குரியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...