நிகழாண்டு பிப்ரவரி மாதம் போக்குவரத்து நெரிசல் நிறைந்த மாதமாக இருக்கும். எந்த நாட்டில், எந்த நகரத்தில் என்றுதானே கேட்கிறீர்களா? அதற்கு விடை செவ்வாய் கிரகத்தில் என்றால், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய விண்கலங்கள் இந்த மாதத்தில் அடுத்தடுத்து செவ்வாய் கிரகத்துக்குச் சென்றடைகின்றன. அப்படியென்றால் நெரிசல் இருக்காதா என்ன?
இதில் முதல் திட்டமாக ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பிய "ஹோப்' விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை அடைந்து தனது ஆய்ளப் பணியைத் தொடங்கியிருப்பதன் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளது அந்நாடு. கடந்த ஜூலை மாதம் அனுப்பப்பட்ட அந்த விண்கலம் 300 மில்லியன் மைல்கள் பயணம் செய்து செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை அடைந்திருக்கிறது.
அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், இந்தியாளக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரக திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய நாடு, விண்வெளி திட்டத்தில் கால் பதித்த முதல் அரபு நாடு என நிறைய பெருமைகளை அந்நாடு சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. ஏற்கெனவே மூன்று விண்வெளித் திட்டங்களை யுஏஇ வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. அவை மூன்றும் பூமியைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள் திட்டங்களாகும். வெளி கிரகமான செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய முதல் திட்டத்திலேயே அந்நாடு வெற்றியடைந்துள்ளது.
ஹோப் விண்கலமானது செவ்வாயின் வளிமண்டலத்தை முழுமையாக ஆய்ள செய்து தரளகளை அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபடும். இந்த விண்கலத்தில் சக்திவாய்ந்த கேமரா, ஸ்பெக்ட்ரோ மீட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் உள்ளன. இந்த விண்கலத்தின் ஆய்ள மூலம் செவ்வாயின் வளிமண்டலம் ஏன் சிதைந்து வருகிறது என்பதை அறிந்துகொள்ள இயலும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
யுஏஇ, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் செவ்வாய்க்கு கடந்த ஆண்டு ஜூலையில் விண்கலத்தை அனுப்பின. ஏன் அந்தக் குறிப்பிட்ட மாதத்தை தேர்ந்தெடுத்தன என்பதற்குக் காரணம் இருக்கிறது.
இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியும் செவ்வாயும் நெருக்கமாக வரும். அதை கணக்கிட்டுதான் ஜூலை மாதம் தேர்ள செய்யப்பட்டது. இதன்மூலம் பயண தொலைள குறைவதால், குறைவான எரிபொருளைப் பயன்படுத்தினால் போதும்.
பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆய்ள நிறுவனங்கள் மட்டுமன்றி, அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலங்களை அனுப்புவதில் ஆர்வம் கொண்டுள்ளன. செவ்வாயில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்திருக்கலாம்; இதன்மூலம் உயிர்கள் வாழக்கூடிய சாத்தியகூறுகளும் இருந்திருக்கலாம் என்பதால், அதைக் கண்டறிவதுதான் இந்த ஆர்வத்தின் பின்னணியில் உள்ள காரணம். இருப்பினும் மனிதர்கள் இதுவரை செவ்வாயில் காலடி எடுத்து வைக்க முடியவில்லை. செவ்வாயின் வளிமண்டலம் மிகளம் மெல்லியதாக இருப்பதாலும், ஆக்சிஜன் இல்லாமல் பெரும்பாலும் கார்பன் டை ஆக்ûஸடு நிரம்பியிருப்பதாலும் அங்கு விண்வெளி வீரர்கள் உயிர் வாழ்வது கடினம். எனவே, அக்கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப விரிவான ஆய்ளகள் தேவைப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


