சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பள்ளி மாணவர்கள் கண்டறிந்த வேற்றுக் கிரகங்கள்!

நீங்கள் பள்ளிக்குச் செல்லும் மாணவரா? அறிவியல் ஆர்வம் கொண்டவரா? வகுப்பறை நேரத்துக்கு இடையில் எப்போதாவது வேற்றுக் கிரகங்களைக் கண்டறிய வேண்டும் என்ற சிந்தனை இருப்பதுண்டா?

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:28 pm

எஸ். ராஜாராம்

நீங்கள் பள்ளிக்குச் செல்லும் மாணவரா? அறிவியல் ஆர்வம் கொண்டவரா? வகுப்பறை நேரத்துக்கு இடையில் எப்போதாவது வேற்றுக் கிரகங்களைக் கண்டறிய வேண்டும் என்ற சிந்தனை இருப்பதுண்டா? இதெல்லாம் பெரிய விஷயம் என மலைக்கத் தேவையில்லை. இதையும் சாதித்துக் காட்டியுள்ளனர் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான  ஜாஸ்மின் ரைட் (18), கார்த்திக் பிங்கிள் (16).

"தி அஸ்ட்ரானமிகல் ஜர்னல்' என்ற இதழில் இதுதொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரை வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையின் இணை ஆசிரியர்களாகவும் இந்த மாணவர்கள் உள்ளனர். சூரியமண்டலத்துக்கு வெளியே உள்ள வேற்றுக் கிரகங்களைக் கண்டறிவதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா "டெஸ்' என்ற செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது. அந்த செயற்கைக்கோள் சேகரித்த தரவுகளின் மூலம் இதுவரை 20 ஆயிரத்துக்கும் அதிகமான வேற்றுக் கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதே தரவுகளைப் பயன்படுத்திதான் பூமியிலிருந்து 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 4 கிரகங்களை இந்த மாணவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதற்காக 2019-20-ஆம் கல்வியாண்டில் ஹார்வர்டு-எம்ஐடியின் மாணவர் ஆராய்ச்சி வழிகாட்டல் திட்டத்தில் இணைந்து, வானியலாளர் டான்சு டேலனுடன் இணைந்து ஜாஸ்மினும், கார்த்திக்கும் ஆய்வில் ஈடுபட்டனர். வாரத்தில் 4 மணி நேரம் இதற்காக அவர்கள் செலவிட்டனர். அதன்படி, டிஓஐ-1233 எனப் பெயரிடப்பட்ட பிரகாசமான, சூரியனைப் போன்ற நட்சத்திரத்தை 4 கிரகங்கள் சுற்றி வருவதை இவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

Story image

அளவு மற்றும் வெப்ப நிலையில் இந்த நட்சத்திரம் நமது சூரியனைப் போல் உள்ளது. இந்த 4 கிரகங்களில் மூன்று துணை நெப்டியூன்கள் என அழைக்கப்படுகின்றன. வாயுக்கள் நிறைந்த இந்த துணை நெப்டியூன்கள், சூரிய மண்டலத்தில் உள்ள நெப்டியூன் கிரகத்தைவிட சிறியவை. இவை தமது நட்சத்திரத்தை சுற்றி வருவதற்கு 6 முதல்  19 நாள்கள் வரை ஆகிறது. மற்றொன்று அதன் பெரிய அளவு, பாறைகள் நிறைந்த தன்மை காரணமாக "சூப்பர் எர்த்' என அழைக்கப்படுகிறது. இது நட்சத்திரத்தை 4 நாள்களுக்குள் சுற்றி வருகிறது. இவற்றின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 700 ஃபாரன்ஹீட் முதல் 1500 ஃபாரன்ஹீட் வரை இருப்பதால், உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இல்லை.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் இளம் வானியலாளர்கள் என்கிற பெருமை இவர்களுக்குக் கிடைத்துள்ளது. "ஓர் ஆராய்ச்சியாளர் என்கிற முறையில், பரிசோதனைக்கும், கற்றுக்கொள்வதற்கும் தயாராக  இருக்கும் இளம் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்' எனப் பாராட்டியுள்ளார் ஆராய்ச்சியாளர் டான்சு டேலன். "இந்தக்  கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர் டேலனுடையது. ஆனாலும், அந்தக் குழுவில் இடம்பெற்றது பெருமைக்குரியது' என்கிறார் மாணவி ஜாஸ்மின் ரைட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.