தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அனிமேஷன் அல்ல... நிஜம்!

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் சிறிய ரக ஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் பறந்தது உந்துவிசை தொழில்நுட்பத்தின் புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.

News image
Updated On :27 ஏப்ரல் 2021, 12:30 am

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் சிறிய ரக ஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் பறந்தது உந்துவிசை தொழில்நுட்பத்தின் புதிய சாதனையாகக் கருதப்படுகிறது. நீங்கள் ஒரு டிரோனை (ஆளில்லா சிறியரக விமானம்) இயக்குவதாக வைத்துக் கொள்வோம். அதன் கட்டுப்பாடு உங்கள் கைகளில் இருக்கும். விரும்பும் உயரத்துக்கு அதை நீங்கள் இயக்க முடியும். ஆனால், இங்கிருந்து 18 கோடி கி.மீ. தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் ஒரு டிரோனை எவ்வாறு கட்டுப்படுத்துவீர்கள்? ஏனெனில் உங்களது கட்டளைகள் செவ்வாய் கிரகத்தைச் சென்றடையவே 20 நிமிடங்கள் ஆகும். உங்கள் கட்டளையை ஏற்று அங்கு டிரோன் பறப்பது தொடர்பான புகைப்படம் உங்களுக்குக் கிடைத்தாலும், அது 20 நிமிடத்துக்கு முன்பு நிகழ்ந்ததாகத்தான் இருக்கும். எதுவும் தவறாக இருந்தால் அதை சரி செய்யக் கூட முடியாது. ஆனால், இந்தச் சாதனையைத்தான் நிகழ்த்திக் காட்டியுள்ளது நாசா குழு.

செவ்வாய் கிரகத்துக்கு பெர்சிவரன்ஸ் விண்கலத்துடன் இணைத்து அனுப்பப்பட்டிருந்த இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் மணல் புயலைக் கிளப்பியபடி கடந்த ஏப். 19-ஆம் தேதி பறந்தது. தரையிலிருந்து 10 அடி உயரத்துக்கு மேலெழும்பிய இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் மொத்தம் 40 நொடிகள் பறந்து பின்னர் தரையிறங்கியது. அதன் நிழல் தரையில் விழுந்த புகைப்படத்தை ஹெலிகாப்டரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமரா படம் பிடித்து அனுப்பியது. கருப்பு-வெள்ளை புகைப்படமாக இருந்தாலும் ஓர் அறிவியல் சகாப்தத்தின் அடையாளமாக அது திகழப் போகிறது. அதைத் தொடர்ந்து, பெர்சிவரன்ஸ் விண்கலத்தின் ரோவரில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா, இன்ஜெனியூட்டி தரையிலிருந்து மெலெழும்பி பறந்து மீண்டும் தரையிறங்குவது வரை விடியோவாகவே பதிவு செய்து அனுப்பியது. ஒரு ரோபோ மற்றொரு ரோபோவை படம் எடுத்ததுபோலத்தான் இது. அனிமேஷன் படம்போலக் காட்சியளித்தாலும், இந்தச் செயல்பாடு உண்மையானது. அதைச் சாதித்துக் காட்டியுள்ளது நாசா. தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் சாதனையாகத்தான் இதைக் கருத வேண்டும். பெர்சிவரன்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாயிலிருந்து மண், கல் மாதிரிகளை சேகரித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பவுள்ளது ஒரு விண்கலம். ஆச்சரியங்கள் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.