தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

செவ்வாயில் ஒரு செல்ஃபி!

நிகழ் வாரத்தில் உலகிலேயே... ஏன் மற்றோர் உலகத்திலும் புகழ்பெற்ற செல்ஃபி எது தெரியுமா?

News image
Updated On :12 ஏப்ரல் 2021, 2:30 pm

நிகழ் வாரத்தில் உலகிலேயே... ஏன் மற்றோர் உலகத்திலும் புகழ்பெற்ற செல்ஃபி எது தெரியுமா? செவ்வாய் கிரகத்தில் பெர்செவரன்ஸ் விண்கலத்தின் ஆய்வு வாகனம் "இன்ஜெனியூட்டி' என்ற சிறிய ரக ஹெலிகாப்டருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபிதான்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக பெர்செவரன்ஸ் விண்கலத்தை அனுப்பியுள்ளது. கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இந்த விண்கலம் ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறது.

அந்த விண்கலத்தின் ஆய்வு வாகனத்தின் வயிற்றுப் பகுதியில் இணைத்து அனுப்பப்பட்டிருந்த சிறிய ஹெலிகாப்டர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செவ்வாயின் தரைப்பரப்பில் வெற்றிகரமாகத் தடம் பதித்தது. அப்போது எடுக்கப்பட்டதுதான் இந்த செல்ஃபி.

செவ்வாயின் ஜெஸேரோ பள்ளத்தாக்குப் பகுதியில் பெர்செவரன்ஸ் தரையிறங்கியுள்ளது. ஆய்வு வாகனத்திலிருந்து 13 அடி தொலைவில் ஹெலிகாப்டர் காணப்படுகிறது. ஆய்வு வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கேமரா மூலம் இந்த செல்ஃபி எடுக்கப்பட்டுள்ளது. 62 தனிப் புகைப்படங்களை இணைத்து இந்த செல்ஃபி படம் உருவாக்கப்பட்டுள்ளதாக நாசாவின் ஜெட் புரபல்ஸன் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

ஆய்வுவாகனத்தில் இருந்து பிரிந்து செவ்வாயின் கடும் குளிரில் தனித்துச் செயல்பட்டது இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர். அதையே பெரும் சாதனையாகக் கருதிய நாசா, தற்போது ஹெலிகாப்டர் முதல்முறையாக செவ்வாய் கிரகத்தில் பறப்பதை எதிர்நோக்கியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்த தடயங்களைத் தேடியே பெர் செவரன்ஸ் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த விண்கலம் என்னென்ன கண்டுபிடிப்புகளைத் தரப் போகிறதோ, அதற்கு இடையே இந்த செல்ஃபிக்கும் ஓர் இடம் உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.