அறிதிறன் பேசி (ஸ்மார்ட் போன்) இல்லை என்றால் இளைஞர்களின் அன்றாட வாழ்வு "ஸ்டார்ட்' ஆகாது என்றே கூறலாம். இன்றைய சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அறிதிறன் பேசியின் முகத்தில் விழிக்காமல் நாளே கழியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அறிதிறன் பேசியைப் பல்வேறு செயலிகளுடன் இணைத்து ஆன்ட்ராய்டு தொழில்நுட்பம் இயக்குகிறது. இதை கூகுள் நிறுவனம் நவீன மாறுதலுக்கு ஏற்ப அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட நேரத்தை நமக்கு நினைவுபடுத்த "அலாரம்' அடிப்பதைப்போல் பல்வேறு வகையிலான ஒலிகளின் மூலம் எச்சரிக்கை தகவல் அளிக்கும் புதிய சேவையை ஆன்ட்ராய்டு அறிமுகம் செய்துள்ளது.
புகை எச்சரிக்கை மணி அடித்தல், தண்ணீர் நிரம்பி வழிதல், குழந்தை அழுதல், வீட்டின் கதவைத் தட்டுதல், நாய் குரைத்தல், வீட்டு உபயோகப் பொருள்களின் எச்சரிக்கை மணி அடித்தல் உள்ளிட்ட 10 ஒலிகளைத் துல்லியமாகக் கேட்டு அவை அறிதிறன் பேசியில் எச்சரிக்கை தகவலாகப் பதிவாகும்.
இந்த ஒலிகள் எப்போது ஒலித்தது, எவ்வளவு நேரம் ஒலித்தது என்பன போன்ற தகவல்களையும் நாம் பின்னர் சேகரித்துத் தெரிந்து கொள்ளலாம். இணையதள சேவையில்லாமலேயே அறிதிறன் பேசியில் உள்ள மைக்ரோபோனை வைத்து இது இயங்கும்.
கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தப் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களுக்கும் இது மிக உபயோகமாக இருக்கும்.
பொதுவாக வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும், பாடல்களைக் கேட்பவர்களும் நாள் முழுவதும் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருப்பார்கள். அதுவும் சாலைகளில் சிலர் ஹெட்போன்களை மாட்டிக் கொண்டு அபாயத்தை அறியாமல் செல்வார்கள்.
இதுபோன்றவர்களுக்கு ஆன்ட்ராய்டின் இந்தப் புதிய சேவை உதவியாக இருக்கும்.
இதைப் பெறுவதற்கு ஆன்ட்ராய்டு அறிதிறன் பேசியில் உள்ள "செட்டிங்ஸில் - ஆக்ஸஸிபிலிட்டி-யைத் தேர்வு செய்து "நியூ நோட்டிபிகேஷன்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இது உங்கள் போனில் காண்பிக்கவில்லை என்றால், ஆன்ட்ராய்டை அப்டேட் செய்துவிட்டு, பிளே ஸ்டோரில் "லைவ் டிரான்ஸ்கிரைப் - சவுண்ட் நோட்டிபிகேஷன்' என்ற ஆன்ட்ராய்டு செயலியைப் பதவிறக்கம் செய்ய வேண்டும். அவ்வளவுதான் உங்கள் அறிதிறன் பேசி எச்சரிக்கை கருவியாக மாறிவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


