தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சென்னை ஐஐடி நடத்தும் ஆன்லைன் படிப்பு...: பிசினஸ் அக்கவுண்டிங் ப்ராசஸ்!

சென்னை ஐஐடி (இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி - மெட்ராஸ்) டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாடெமி சார்பாக பிசினஸ் அக்கவுண்டிங்  ப்ராசஸ் என்ற படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.  

News image
Updated On :2 நவம்பர் 2020, 4:35 pm


சென்னை ஐஐடி (இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி - மெட்ராஸ்) டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாடெமி சார்பாக பிசினஸ் அக்கவுண்டிங் ப்ராசஸ் என்ற படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த படிப்பை சென்னை ஐஐடி டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாடெமி - பெங்களூருவைச் சேர்ந்த ஆர்த வித்யா அமைப்பு ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

நிதி மற்றும் கணக்குப் பதிவியல் துறையில் பணி செய்யும், செய்ய விரும்பும் மாணவர்கள், தொழில் சார்ந்தவர்கள் தங்களுடையதிறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முழுவதும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் படிப்பாகும்.

மேலும் ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடத்தப்படுகிறது. எப்போது வேண்டு
மானாலும் இப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். கலந்துரையாடல் மூலம் இந்த படிப்பு நடத்தப்படுகிறது. மேலும் வேலை வாய்ப்பை மையமாகக் கொண்டு இது நடத்தப்படுகிறது.

படிப்பின் காலம் 8 வாரங்கள். வகுப்புகள் நடத்தப்படும் கால அளவு 54 மணி நேரம். படிப்பு காலம் முடிந்த பிறகு சென்னை ஐஐடி சார்பாக சான்றிதழ் வழங்கப்படுகிறது. கட்டணம் ரூ.9,558. இந்த சான்றிதழ் படிப்புக்கு Centre for Continuing Education, IIT Madras அனுமதி வழங்கியுள்ளது.

இந்த படிப்பானது மாணவர்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்வது போன்ற அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என சென்னை ஐஐடி டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாடெமியின் தலைவர் பேராசிரியர் கே. மங்கள சுந்தர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாஸ்காம் (நேஷனல் அசோசியேஷன் ஆஃப் சாஃப்ட்வேர் அண்ட் சர்வீஸ் கம்பெனிஸ்) அமைப்பின் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப இப்படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பானது 3 மாதங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்த அனுபவத்தை வழங்கக் கூடியதாக இருக்கும்.

இந்த படிப்பைப் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த படிப்பு குறித்த மேலும் விவரங்களுக்கு : https://skillsacademy.iitm.ac.in/program-inner.php?courseID=18&cart= என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.