ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மர்மக் காய்ச்சலில் இருந்து தப்பிக்க வழி என்ன?
தமிழகத்தில் கொசு அதிகரிப்பு மற்றும் தட்ப வெப்ப மாற்றத்தால் மர்மக் காய்ச்சல் அதிகரித்துவருகிறது.


தமிழகத்தில் கொசு அதிகரிப்பு மற்றும் தட்ப வெப்ப மாற்றத்தால் மர்மக் காய்ச்சல் அதிகரித்துவருகிறது. காய்ச்சல் பாதிப்பு ஒரு வாரத்திற்கும் மேலாக உடலை வாட்டுவதால், பொதுமக்கள் திணறி வரும் இவ்வேளையில் ஆயுர்வேதத்தின் பங்களிப்பு இவ்விஷயத்தில் எவ்வாறு இருக்கும்?
-ராசேந்திரன்,
சென்னை.
சுற்றுப்புற சுகாதாரம் பாதுகாக்கப்படாமல் தேக்கமடையும் குப்பைகள், திறந்தநிலையிலுள்ள நீர்நிலைகள், இரவில் அதிக அளவு பனிப்பொழிவு போன்றவற்றால் உருவாகும் கொசுக்கள் தம் வாழ்நாளான 21 நாள்களைத் தாண்டி 30 நாள்கள் வரை வாழ்வதால், அவற்றின் மூலம் கொசுக்கடிக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை கூடியுள்ளதால், மர்மக் காய்ச்சல் தற்சமயம் அதிகரித்துள்ளது.
மாநகராட்சியும் கொசு ஒழிப்புத் திட்டத்தில் நீர்நிலைகள் முதல் குடிசைப்பகுதிகள் வரை கொசு மருந்து தெளித்து வந்தாலும், மக்களும் குப்பைகளை பைகளில் சரியானபடி அடைத்து முடிச்சிட்டு, குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும். பலரும் அலட்சியமாக பைகளை வீசிச் செல்வதால், மாடும் நாய்களும் அவற்றை கொதரி பையைப் பிரித்துப் போட்டுவிடுவதால், சுகாதாரக் கேடு கூடிவிடுகிறது. மேலும், தட்பவெப்ப நிலை காரணமாக, வைரஸ் தங்கள் மரபணுவை மாற்றிக் கொள்வதால் தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக பூச்சியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
தொண்டை வலி, சளி, இருமலுடன் காய்ச்சலுமிருந்தால், துளசி மிளகை தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க மிகவும் நல்லது. 10 கிராம் துளசி, 5 கிராம் மிளகு என்ற கணக்கில் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்கவிட்டு, 125 மில்லியாக வற்றியதும் வடிகட்டி, காலையில் 65 மில்லியும், மாலையில் 60 மில்லியும் இளம்சூடாக வெறும் வயிற்றில் 3 நாள்கள் முதல் 7 நாள்கள் வரை பருகலாம்.
மாவுப் பொருள்களாகிய இட்லி, தோசை, வடை ஆகியவற்றைத் தவிர்த்து, சூடான புழுங்கலரிசி சாதத்துடன் கலந்த பருப்பையும், நெய்யையும் நன்றாகப் பிசைந்து, மிளகு, சீரகம், தனியா சேர்த்த சூடான ரசம் கலந்து சாப்பிட உகந்தது. தொட்டுக் கொள்வதற்கு சுட்ட அப்பளம், கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலைத் துவையல் சாப்பிடலாம். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், தம்மை தனிமைப்படுத்திக் கொள்வதுடன், வீட்டிலுள்ள முதியவர்களை முகக் கவசம் அணியும்படி கேட்டுக் கொள்ளலாம். வீட்டிலுள்ள அனைவரும் உள்ளங்கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்குக் கொசுக்கடியால் ஏற்படும் தோல் தினவு, காய்ச்சல், சளி, இருமல், உடல்வலியில் ரஜன்யாதி சூரணம் எனும் மருந்தையும், கோரோசனாதி குளிகை, அன்னிகுமார ரஸம் மாத்திரை, ஆசால்யாதி மாத்திரை, அமிருதாரிஷ்டம் போன்றவையும் கொடுக்கப்பட வேண்டியவை. மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடவும்.
மருந்துதான் கொடுத்தாகிவிட்டதே என நினைத்து உடல்நிலை சரியில்லாத குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சரியல்ல!
மூச்சுவிடுதலில் சிரமம், நினைவாற்றல் குறைவது, இடைவிடாத காய்ச்சல் போன்ற நேரங்கள் தசமூலகடுத்திரயம் கஷாயத்தை தேனுடன் கலந்து, காலை மாலை என இரு வேளை சாப்பிடலாம்.
பசியின்மையுடன் கூடிய குமட்டல், சளி, இருமல், நாவரட்சி, வைரஸ் பாதிப்பினால் மலம் அதிக அளவில் கழிதல், காய்ச்சல் போன்ற நிலைகளில் குடூச்யாதி கஷாயம், வில்வாதி குளிகை, சுதர்சனம் மாத்திரை போன்றவை நல்ல பயன்தரக் கூடியவை.
காய்ச்சலுடன் கூடிய ஓய்ச்சல், வயித்து வலி, வயிறு உப்புசம், பலவீனம், நெஞ்சு சளி ஆகியவற்றில் இந்து காந்தம் கஷாயம், தான் வந்திரம் குளிகை சாப்பிட
நல்லது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...