பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: விட்டமின் 'ஏ' சத்து அதிகரிக்க...!

என் பத்து வயது பையன் நோஞ்சானாக இருக்கிறான். டாக்டர், மீன் எண்ணெய் கேப்ஸ்யூல் சாப்பிட்டால் உடல் நல்ல வனப்புடன் ஆகிவிடும் என்றார். ஆனால் அவனுக்கு அது செரிக்காமல் பசி மந்தம் ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக ஆ

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:50 pm

எஸ். சுவாமிநாதன்

என் பத்து வயது பையன் நோஞ்சானாக இருக்கிறான். டாக்டர், மீன் எண்ணெய் கேப்ஸ்யூல் சாப்பிட்டால் உடல் நல்ல வனப்புடன் ஆகிவிடும் என்றார். ஆனால் அவனுக்கு அது செரிக்காமல் பசி மந்தம் ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக ஆயுர்வேத மருந்து ஏதும் இருக்கிறதா? விட்டமின் ஏ சத்து அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?

ராஜாராமன், திருச்சி.

உங்களுடைய மகனுக்கு வயிறு மந்தமாக இருக்கிறது. அதனால் கொழுப்புமிக்க மீன் எண்ணெய் செரிக்கவில்லை. இதற்கு மாற்றாக ஆட்டுப்பால், பசும்பால், பசுவின் தயிர், வெண்ணெய், வெந்தயம் இவற்றை உணவாகக் கொடுக்கலாம். பசி மந்தம் நீங்கினால்தான் இவற்றில் உள்ள சத்து உடலில் சேரும். அதற்குச் சிறந்த வழி கொத்தமல்லி துவையல் அல்லது கறிவேப்பிலைத் துவையல் செய்து சூடான சாதத்துடன் கலந்து, சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடக் கொடுக்கவும். அதற்கு மேல் நன்றாகக் கடைந்து வெண்ணெய் நீக்கிய மோர் குடிக்கக் கொடுக்கவும். இதைக் காலை உணவாக சிறிது நாட்கள் தொடர்ந்து கொடுத்து வர, பசித்தீ மளமளவென வளரும். மேலும் கொத்தமல்லியும், கறிவேப்பிலையும் மீன் எண்ணெய்க்குச் சற்றும் குறைந்தவை அல்ல. 100 கிராம் மீன் எண்ணெய்யில் சுமார் 50,000 யூனிட் விட்டமின் ஏ கணிசமாக உள்ளது எனக் கூறுகின்றனர். அதேபோல பச்சைக் கொத்தமல்லி இலையில் சுமார் 12,500 யூனிட்டும், பச்சைக் கறிவேப்பிலையில் 12,500 யூனிட்டும், முருங்கைக்கீரையில் 11,500 யூனிட்டும், அகத்திக்கீரையில் 10,000 யூனிட்டும், முளைக்கீரை, அரைக்கீரை, வெற்றிலை ஆகியவற்றில் 10,000 யூனிட்டும் விட்டமின் ஏ கணிச விகிதத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 5,000 யூனிட் வேப்பிலைக் கொழுந்துவிலும், பசலைக்கீரை மற்றும் வெந்தயக் கீரையில் 4,000 யூனிட்டும் விட்டமின் ஏ இருப்பதாகத் தெரிகிறது.

இவை அனைத்தும் உடலுக்கு ஒரு தொந்தரவும் செய்வதில்லை. அழகாக சமைத்து ஒரு கிண்ணத்தில் ஸ்பூன் போட்டு வைத்துவிட்டால் பார்ப்பதற்குத்தான் எத்தனை அழகு! மனதிற்கு எத்தனை இன்பத்தைத் தருகின்றன! எத்தனை விரைவில் செரித்து பசியைத் தூண்டுகின்றன! எந்தப் போஷகச் சத்தையும் உடல்தானே ஏற்றுக்கொள்ளும் சக்தியை இவை மூலம் பெறுவதால் உங்கள் மகன் விரைவில் நோஞ்சான் நிலையிலிருந்து மீண்டு, குண்டாக அழகாக கொழுகொழு குழந்தையாகக் காட்டலாம்.

உணவுச் சத்து இடைவிடாமல் சேர்வதால் உடல் புஷ்டிதானே ஏற்படும். அடிக்கடி காய்ச்சல், சளி முதலிய நோய்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு எண்ணெய்க் குளியலைத் தவறாமல் அமைத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய மகனுக்கு ஒரு சில ஆயுர்வேத மூலிகைத் தைலங்கள் புஷ்டியைத் தரக்கூடும். லாக்ஷதி தைலம், சந்தன பலாலாக்ஷôதி தைலம், அச்வகந்தி பலாலாக்ஷôதி தைலம் முதலியவை இந்நிலையில் ஏற்ற எண்ணெய் தேய்ப்புத் தைலங்கள் ஆகும்.

ஆக, உள்ளுக்கு விட்டமின் ஏ சத்து நிறைந்த அதே சமயத்தில் ஜீர்ணகோச உறுப்புகளின் சக்தியையும் தூண்ட உதவும் கொத்தமல்லி, கறிவேப்பிலைத் துவையல் போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலமாகவும், மேலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதாலும், உடலில் சுறுசுறுப்படைந்த பசித்தீ, கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். எதையும் செரிக்கும் அளவிற்கு அது வளர்ந்துவிட்டால், தினமும் காலைச் சிற்றுண்டியுடன் இரண்டு உளுந்து வடையை, நடுவே ஓட்டை போடாமல்! பசு நெய்யில் பொரித்துச் சாப்பிடக் கொடுக்கவும். உடல் வனப்பு நன்றாகக் கூடும். அதன் பிறகு ஆயுர்வேத லேஹிய மருந்துகளாகிய கூஷ்மாண்டரஸôயனம், அமிருதப்ராசம், சியவனப்ராசம், பிராம்ஹ ரஸôயனம் போன்றவற்றில் ஒன்றை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடக் கொடுக்கவும்.

(தொடரும்)





பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 9444441771



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.