ஆயுர்வேத மருந்துகளில் சாரஸ்வத சூர்ணம் எனும் மருந்தை, குழந்தை பிறந்து ஆறுமாத காலம் ஆன பிறகு ஒன்று அல்லது இரண்டு சிட்டிகை எடுத்து, சாரஸ்வத கிருதம் எனும் நெய் மருந்தை 2 - 4 துளிகள் சேர்த்து, 1 - 2 துளிகள் தேனும் குழைத்து காலை, இரவு உணவின் ஒவ்வொரு கவளத்திற்கும் நடுவே, குழந்தையின் நாக்கின் நடுவே தடவிவிட, பிராண வாயுவினால் ஏற்படும் கோளாறுகள் விலகி, குழந்தைக்குப் பேச்சுத்திறன் மேம்பட நல்ல வாய்ப்பிருக்கிறது. தலைக்கு பலா தைலத்தை இளஞ்சூடானவிதத்தில் தடவி, காதின் பின்புறம், கழுத்து ஆகிய பகுதிகளில் மென்மையாகத் தடவி, சிறிதுநேரம் ஊறிய பிறகு, வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டி, பூத்துண்டால் குழந்தையின் உடலைச் சுற்றி, வெதுவெதுப்பான பால், வெந்நீர் போன்றவற்றைப் பருகச் செய்ய வேண்டும்.