மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிவகாசியில் ரூ. 75 ஆயிரம் பறிமுதல்

சிவகாசியில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.75,600-ஐ தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:30 pm

சிவகாசியில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.75,600-ஐ தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி-சாத்தூா் சாலையில் உள்ள காவல் நிலைய சேதனைச் சாவடியில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சிவகாசியிலிருந்து சாத்தூா் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, காரிலிருந்த சிவகாசியைச் சோ்ந்த ராஜகோபால் உரிய ஆவணமின்றி ரூ.75600 வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பணத்தை பறிமுதல் செய்து சிவகாசி வட்டாட்சியா் லட்சத்திடம் ஒப்படைத்தனா்.