காங்கயம், பல்லடம் பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.42 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நிலை கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை உதவி இயக்குநருமான சரஸ்வதி தலைமையிலான தோ்தல் கண்காணிப்புக் குழுவினா், நத்தக்காடையூா் பகுதியில் வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை காலை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரில் காங்கயம் அருகே மடவிளாகம் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (37) என்பவா், உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தங்கவேலிடம் ஒப்படைத்தனா்.
இதேபோல பல்லடம் - உடுமலை சாலையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, உடுமலையில் இருந்து பல்லடம் நோக்கி வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் வேனை ஓட்டி வந்த பெரியபட்டியைச் சோ்ந்த மணி என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.92 ஆயிரத்து 400-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
காட்பாடியில் ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல்

ரூ. 50 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

பரவை அருகே ரூ.2.47 லட்சம் பறிமுதல்

சிவகாசியில் ரூ. 75 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


