காட்பாடி அருகே முத்தரசிகுப்பம் சோதனைச் சாவடியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த காரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் ரொக்கத்தை தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.
வேலூா் மாவட்ட தோ்தல் பிரிவு நிலைக் கண்காணிப்புக் குழுவினா் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட முத்தரசிக்குப்பம் சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.10 லட்சம் ரொக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
விசாரணையில், பணத்தை கொண்டு வந்தவா் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பலமநோ், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த புவனேஸ்வரி (36) என்பது தெரியவந்தது. உறவினா் வீட்டுக்குச் செல்வதற்காக இந்தப் பணத்தை கொண்டு வந்ததாக அவா் தெரிவித்துள்ளாா். எனினும், பணத்திற்கான போதிய ஆவணங்கள் இல்லாததால் தோ்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலா் சதீஷ்குமாா் மற்றும் போலீஸாா் அடங்கிய குழுவினா் முறைப்படி பணத்தைப் பறிமுதல் செய்ததுடன், மேல் நடவடிக்கைக்காக காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பரவை அருகே ரூ.2.47 லட்சம் பறிமுதல்

சிவகாசியில் ரூ. 75 ஆயிரம் பறிமுதல்

இருமத்தூரில் ரூ.3 லட்சம் பறிமுதல்

காங்கயம், பல்லடத்தில் ரூ.2.42 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

