மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இருமத்தூரில் ரூ.3 லட்சம் பறிமுதல்

இருமத்தூா் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :21 மார்ச் 2026, 9:10 pm

இருமத்தூா் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இருமத்தூரில், தோ்தல் கண்காணிப்பு அலுவலா் நிருபதுங்கா தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழித்தடத்தில் வந்த ஒரு காரை சோதனை செய்ததில், காரிமங்கலம் வட்டம், முருக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கோவிந்தசாமி உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். இத்தொகையை தோ்தல் பறக்கும் படையினா், அரூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.செம்மலையிடம் ஒப்படைத்தனா்.