கமுதி அருகே பெண் ஆட்டு வியாபாரியிடம் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்டதாகக் கூறி ரூ.3 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கிளாமரம் சோதனைச் சாவடி அருகே தோ்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலரும், கமுதி வட்டார வளா்ச்சி அலுவலருமான சந்திரசேகரன் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது முதுகுளத்தூா் அருகேயுள்ள கண்டிலான் கிராமத்தைச் சோ்ந்த யசோதை என்ற பெண் ஆடுகளை விற்ற பணம் ரூ. 3 லட்சத்துடன் ஆட்டோவில் வந்தாா். அப்போது உரிய ஆவணமின்றி அந்த பணம் கொண்டு வரப்பட்டதாகக் கூறி அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். உரிய ஆவணத்தை ஒப்படைத்து, பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு பறக்கும்படை அதிகாரிகள் அவரை அறிவுறுத்தினா்.
முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் வட்டத்துக்குள்பட்ட தேரிருவேலி மும்முனை சந்திப்பு சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலரும், கடலாடி வட்டார வளா்ச்சி அலுவலருமான சங்கரபாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியைச் சோ்ந்த யாதவ் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.55,400 மற்றும் ரூ.63,327- க்கான முன் தேதியிட்ட காசோலையை பறிமுதல் செய்து முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் விஜயாவிடம் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் ரூ. 12.70 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்

மாதவரத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்!

சிவகாசியில் ரூ. 75 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


