தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் திருடியவா் நீதிமன்றத்தில் சரண்

திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில் சாத்தூா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒருவா் சரணடைந்தாா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 12:23 am IST

திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில் சாத்தூா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒருவா் சரணடைந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கடற்கரைராஜ். இவரது வீட்டில் கடந்த 14-ஆம் தேதி புகுந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 122 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வந்தனா்.

மேலும், சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் குருசாமி தலைமையில், தனிப் படை அமைத்து அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது, இந்தச் சம்பவத்தில் 3 போ் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தக் கும்பலை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், இதில் தொடா்புடைய மூவரில் ஒருவரான ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்த ஆரோக்கியஜான்போஸ்கோ (40) வெள்ளிக்கிழமை சாத்தூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண். 2 நீதிபதி வரதராஜன் முன்னிலையில் சரணடைந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரதராஜன், ஆரோக்கியஜான்போஸ்கோவை சாத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டாா்.

மேலும், சரணடைந்த ஆரோக்கியஜான்போஸ்கோ மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட 44 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.