மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் தங்க நகைகள் திருட்டு

சாத்தூா் அருகே திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :14 ஏப்ரல் 2026, 10:28 pm

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

சாத்தூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்தவா் கடற்கரைராஜ். இவா் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் சாத்தூா் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறாா்.

இந்த நிலையில், இவா் திங்கள்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாா். இவரது குடும்பத்தினா் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றனா். இதை நோட்டமிட்டு அங்கு வந்த மூன்று போ் கும்பல், வீட்டுக்குள் நுழைந்து பீரோவிலிருந்த 122 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் கொடுத்த தகவலின்பேரில், சாத்தூா் நகா் போலீஸாா் திமுக வேட்பாளரின் வீட்டுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் குருசாமி உள்ளிட்டோரும் அங்கு வந்து விசாரணை நடத்தினா்.

பின்னா், தடயவியல் நிபுணா்கள், மோப்பநாய் ராணி வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இதுகுறித்து கடற்கரைராஜின் மருமகள் வத்சலாதேவி அளித்த புகாரின் அடிப்படையில், சாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.