அத்தியாயம் 12 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் – 5
5000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்ட புதிர்ப்பாதைகள் இனம், மொழி, சமயம், நாட்டு எல்லை வரையறுப்புகள் என அனைத்தையும் கடந்து, இன்றும் தம்மை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டுள்ளன. தம்முடைய நீண்ட நெடும் பயணத்தில், இவை தம்மை தொடர்ந்து புதுப்பித்தும்கொண்டு வளர்ந்து வந்துள்ளன.




























