கிருஷ்ணசாமி, பேனர்ஜி, செளந்தரராஜன், சீனிவாசன் ஆகியோரால் தமிழகத்தில் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன (K.S. Ramachandran, Archaeology of South India - Tamil Nadu, Sundeep Prakashan, Delhi, 1980). பி. நரசிம்மய்யா அவர்கள் தமிழகப் பெருங் கற்படைச் சின்னங்கள் குறித்து விரிவாக ஆய்ந்துள்ளார் (B. Narashimmaiah, Neolithic and Megalithic Culture in Tamil Nadu, Sundeep Prakasjan, Delhi, 1980). பின்னர் கா. ராஜன் அவர்கள், மாவட்டம் வாரியாக இச்சின்னங்கள் குறித்து விரிவாக ஆய்ந்துள்ளார். (K. Rajan, 1. Archaeological Gazeeter of Tamil Nadu, Mano Pathippagam, Thanjavur, 1997, 2. Cataloguge of Archaeological Sites in Tamil Nadu, Heritage India Trust, Thanjavur, 2009)