நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

செ.குளோரியான்

பாடல் - 5

கண்ணபிரானை, விண்ணோர் கருமாணிக்கத்தை, அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன், நடுவே ஓர் உடம்பில் இட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன்கயிற்றால்,
புண்ணை மறைய வரிந்து என்னைப் போரவைத்தாய் புறமே.

கண்ணபிரானே, விண்ணோர்கள் தொழுகின்ற கருமாணிக்கமே, அமுதமே, உன்னை நெருங்கினேன், ஆனாலும் நெருங்கவில்லை, காரணம், என் உடல்/இந்த மனிதப்பிறவி, நீதான் என்னை இந்த உடலில் இட்டாய் (மனிதப்பிறவி எடுக்கவைத்தாய்), பலவிதமான வினைகள் என்கிற வலிமையான கயிற்றால் நன்கு உறுதியாகக் கட்டினாய், என்னுடைய குற்றங்கள் மறையும்படி மேல்பூச்சுப் பூசி என்னை உன்னிலிருந்து வெளியே ஒதுக்கிவைத்தாய். (ஆகவே, நீதான் என்னை இதிலிருந்து விடுவிக்க வேண்டும்.)

******

பாடல் - 6

புறம் அறக் கட்டிக்கொண்டு இரு வல்வினையார் குமைக்கும்
முறைமுறை யாக்கை புகல் ஒழியக் கண்டு               
                                                                               கொண்டொழிந்தேன்,

நிறம் உடை நால் தடம் தோள், செய்யவாய், செய்ய
                                                                                தாமரைக்கண்,
அறம் முயல் ஆழி அம்கைக் கருமேனி அம்மான்தன்னையே.

இருவகையான வலிய வினைகளும் என்னைக் கட்டிப்போட்டிருக்கின்றன, அந்த முடிச்சு வெளியே தெரியாதபடி உள்ளே அமைத்திருக்கின்றன, (ஆகவே, என்னால் அதனை அவிழ்த்துக்கொள்ள இயலாது.) இப்படி அவை என்னைத் தொடர்ந்து துன்புறுத்துவதால், திரும்பத்திரும்ப வெவ்வேறு உடல்களில் புகுகின்ற (பிறந்து, இறக்கின்ற) துயரம் ஏற்படும், அத்தகைய துயரத்திலிருந்து என்னை விடுவித்தவன் எம்பெருமான், அழகிய, பெரிய நான்கு திருத்தோள்கள், சிவந்த திருவாய், சிவந்த தாமரை போன்ற திருக்கண்கள், அறத்தை வலியுறுத்தும் சக்ராயுதத்தை ஏந்திய உள்ளங்கை, கரிய திருமேனி கொண்ட அந்த அம்மானைக் கண்டேன், என் பிறவித்துயரம் தீர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.