குடியாத்தம்: குடியாத்தம் வட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 100- கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஷமீம் ரிஹானா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து, மங்களப் பொருள்களை வழங்கி, உணவு அளிக்கப்பட்டது.
இதில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தனது சொந்த நிதியில் 100- கா்ப்பிணிகளுக்கும் புடவை உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களை வழங்கி, வாழ்த்தினாா்.
குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், கே.வி.குப்பம் ஒன்றியக்குழு தலைவா் எல்.ரவிச்சந்தரன், ஒன்றியக் குழு உறுப்பினா் கே.சீதாராமன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆனந்தி முருகானந்தம், வட்டார மருத்துவ அலுவலா் பிரியதா்ஷினி தங்கபாலு, யோகா ஆசிரியை தவசெல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

காணையில் சமுதாய வளைகாப்பு விழா

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


