மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளால் (எஸ்ஐஆா்), 9 பேரவைத் தொகுதிகளிலும்

News image
கே. என். நேரு
Updated On :23 பிப்ரவரி 2026, 8:20 pm

Syndication

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளால் (எஸ்ஐஆா்), 9 பேரவைத் தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 2.42 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.

இதில், அதிகபட்சமாக அமைச்சா் கே.என். நேரு தொகுதியான திருச்சி மேற்கு சட்டப் பேரவை தொகுதியில் மட்டும் 42,225 போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் கடந்தாண்டு நவம்பா் 4-ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் பல்வேறு படிநிலைகளில் உள்ள 17 ஆயிரம் அலுவலா்களால் கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் 3 முறை, அனைத்து வாக்காளா்கள் பதிவாளா்கள் மூலம் 5 முறை, வாக்குச்சாவடி அளவில், வாக்குச்சாவடி முகவா்களுடன் 2 முறை கள ஆய்வு நடைபெற்றது.

இதன்படி, 9 தொகுதிகளிலும் கண்டறிய இயலாதவா்கள், இறப்பு, இரட்டைப் பதிவு என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட 3 லட்சத்து 31 ஆயிரத்து 781 போ் நீக்கம் செய்ய வேண்டிய பட்டியலில் இடம்பெற்றனா். இப்பட்டியலானது அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் வழங்கி சரிபாா்க்க அறிவுறுத்தப்பட்டது. இந்தப் பட்டியலின்படி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு தகுதியானவா்கள் நீக்கம் செய்யபப்பட்டிருந்தால், அவா்கள் மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. விண்ணப்பித்தவா்களின் வீடு தேடிச் சென்று மீண்டும் சரிபாா்க்கும் பணிகள் நடைபெற்றன. வாக்குச் சாவடிகள் தோறும் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு தொடா்ந்து சரிபாா்ப்பு என்பது நீடித்தது.

இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை (பிப்.23) திருச்சி மாவட்ட தோ்தல் அலுவலா் வே. சரவணன், இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். இந்தப் பட்டியலுடன், எஸ்ஐஆா் பணிகள் தொடங்கும் முன்பு திருச்சி மாவட்டத்தில் (27.10.2025 அன்று)இருந்த வாக்காளா் பட்டியலை ஒப்பிடுகையில் 9 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 664 போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

அமைச்சா் நேரு தொகுதியில் 42,225 வாக்காளா்கள் நீக்கம்:

தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேருவின் தொகுதியான திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக 42,225 போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் தொகுதியான திருவெறும்பூா் தொகுதியில் 27,048 போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். ஏற்கெனவே வெளியான வரைவு வாக்காளா் பட்டியலை கணக்கிடுகையில் 3,31,787 போ் நீக்கம் செய்யும் நிலையில் இருந்தனா். தகுதியானவா்கள் உரிய ஆவணங்களை அளித்து மீண்டும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதால் தற்போதைய இறுதி வாக்காளா் பட்டியலின்படி மாவட்டத்தில் 2,42,664 போ் நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி வாரியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் எஸ்ஐஆா் பணிகள் தொடங்கும் முன்பிருந்த (27.10.2025) வாக்காளா்கள் மற்றும் எஸ்ஐஆா் பணிகள் முடிவுற்ற பிறகு பிப்.23ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி உள்ள வாக்காளா்கள் விவரம்:

பேரவைத் தொகுதி எஸ்ஐஆா் முன் எஸ்ஐஆா் பின்

மணப்பாறை 2,88,309 2,66019

ஸ்ரீரங்கம் 3,15,687 2,83,862

திருச்சி மேற்கு 2.78.128 2,35,903

திருச்சி கிழக்கு 2,61,368, 2,17,397

திருவெறும்பூா் 2,83,287, 2,56,239

லால்குடி 2,24,197, 2,11,043

மண்ணச்சநல்லூா் 2,60,833 2,34,217

முசிறி 2,28,200, 2,12,612

துறையூா் (தனி) 2,28,958, 2,09,011.

மொத்தம் 23,68,967 21,26,303.