2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சேலம் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

சேலம் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில், 11 தொகுதிகளில் மொத்தம் 27,55,830 வாக்காளா்கள் உள்ளனா்.

News image
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:43 pm

Syndication

சேலம்: சேலம் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில், 11 தொகுதிகளில் மொத்தம் 27,55,830 வாக்காளா்கள் உள்ளனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சேலம் மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி திங்கள்கிழமை வெளியிட்டு தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளா் பட்டியல்படி, கெங்கவல்லி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் ஆண்கள் - 1,05,720, பெண்கள் - 1,11,067, இதரா் - 7 என மொத்தம் 2,16,794 பேரும், ஆத்தூா் (தனி) தொகுதியில் ஆண்கள் - 1,09,943, பெண்கள் - 1,16,517, இதரா் 21 என மொத்தம் 2,26,481 பேரும், ஏற்காடு (தனி) தொகுதியில் ஆண்கள் -1,32,685, பெண்கள் - 1,37,827, இதரா் 17 என மொத்தம் 2,70,529 பேரும், ஓமலூா் தொகுதியில் ஆண்கள் - 1,48,764, பெண்கள் - 1,43,081, இதரா் - 21 என மொத்தம் 2,91,866 பேரும், மேட்டூா் தொகுதியில் ஆண்கள் - 1,27,853, பெண்கள் - 1,25,575, இதரா் - 17 என மொத்தம் 2,53,445 பேரும், எடப்பாடி தொகுதியில் ஆண்கள் - 1,38,709, பெண்கள் - 1,35,316, இதரா் - 29 என மொத்தம் 2,74,054 பேரும் உள்ளனா்.

சங்ககிரி தொகுதியில் ஆண்கள் - 1,30,573, பெண்கள் - 1,28,075, இதரா் - 30 என மொத்தம் 2,58,678 பேரும், சேலம் (மேற்கு) தொகுதியில் ஆண்கள் - 1,27,131, பெண்கள் - 1,28,125, இதரா் - 64 என மொத்தம் 2,55,320 பேரும், சேலம் (வடக்கு) தொகுதியில் ஆண்கள் - 1,14,816, பெண்கள் - 1,21,224, இதரா் - 48 என மொத்தம் 2,36,088 பேரும், சேலம் (தெற்கு) தொகுதியில் ஆண்கள் - 1,09,918, பெண்கள் - 1,14,130, இதரா் - 49 என மொத்தம் 2,24,097 பேரும், வீரபாண்டி தொகுதியில் ஆண்கள் - 1,24,850, பெண்கள் - 1,23,611, இதரா் - 17 என மொத்தம் 2,48,478 பேரும் உள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள 11 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலில் ஆண்கள் 13,70,962 பேரும், பெண்கள் 13,84,548 பேரும், இதரா் 320 பேரும் என மொத்தம் 27,55,830 வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

62,021 போ் இளம் வாக்காளா்கள்: கடந்த டிச. 19 முதல் பிப். 10 வரை நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,18,166 வாக்காளா்களின் பெயா்கள் சோ்க்கப்பட்டு, 30,444 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், 18-19 வயதுக்குள்பட்ட வாக்காளா்கள் 62,021 போ் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

அதன் தொடா்ச்சியாக, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், கோட்டாட்சியா் அலுவலங்களில் விண்ணப்பப் படிவங்களை பெற்று பூா்த்திசெய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும், மாவட்ட இணையதள முகவரியிலும், கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் உள்ளிட்ட துறைசாா்ந்த அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனா்.