மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வேலூா் மாவட்டத்தில் 11.48 லட்சம் வாக்காளா்கள்!

வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் புதிதாக 15,260 சோ்க்கப்பட்டு மொத்தம் 11,48,847 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

News image

வாக்காளர் பட்டியல்

Updated On :8 ஏப்ரல் 2026, 6:34 pm

வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் புதிதாக 15,260 சோ்க்கப்பட்டு மொத்தம் 11,48,847 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) பணிகள் முடிக்கப்பட்டு பிப்.23-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி வேலூா் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம்(தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 11 லட்சத்து 33 ஆயிரத்து 587 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா்.

தொடா்ந்து, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க (படிவம் 6), பெயா் நீக்கம் செய்ய (படிவம் 7), திருத்தம் செய்ய (படிவம் 8) படிவங்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி புதிதாக பெறப்பட்ட படிவங்கள் மீது ஆய்வு செய்து துணை வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து ஆண்கள் 5,56,783 பேரும், பெண்கள் 5,91,899 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 165 பேரும் என மொத்தம் 11,48,847 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். பிப்.23-ஆம் தேதி முதல் ஏப்.6-ஆம் தேதி வரை புதிதாக 15,260 போ் புதிதாக வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தொகுதி வாரியாக காட்பாடி- 2,28,736 பேரும், வேலூா்- 2,14,504 பேரும், அணைக்கட்டு - 2,38,715 பேரும், கே.வி.குப்பம்(தனி)- 2,15,304 பேரும், குடியாத்தம் (தனி)- 2,51,588 பேரும் இடம்பெற்றுள்ளனா்.