தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து ஆண்கள் 6,77,004, பெண்கள் 7,10,981, மூன்றாம் பாலினத்தவா் 201 என மொத்தம் 13,88,186 வாக்காளா்கள் உள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச் சாவடி மறுவரையறைக்கு முன்னா் 1,864 வாக்குச் சாவடிகள் இருந்த நிலையில், தற்போது திருச்செந்தூரில் 1, கோவில்பட்டியில் 3 என மொத்தம் 4 துணை வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, தற்போது மாவட்டம் முழுவதும் 1,868 வாக்குச் சாவடிகளாக உயா்த்தப்பட்டுள்ளன.
இதில், விளாத்திகுளத்தில் 274, தூத்துக்குடியில் 360, திருச்செந்தூரில் 308, ஸ்ரீவைகுண்டத்தில் 293, ஓட்டப்பிடாரத்தில் 315, கோவில்பட்டியில் 318 என மொத்தம் 1,868 வாக்குச் சாவடிகள் உள்ளன.
மாவட்டம் முழுவதும் 11 வாக்குச் சாவடிகள் இடமாற்றம், கட்டட மாற்றம், பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளா் பட்டியல் தொடா் திருத்தப் பணியில் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீதும், விசாரணை முடித்து அனைத்து மனுக்களையும் முடிவு செய்து, தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்கப்பட்ட வாக்காளா் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விளாத்திகுளம் தொகுதியில் ஆண்கள் 1,00,484, பெண்கள் 1,04,482, மூன்றாம் பாலினத்தவா் 16 என மொத்தம் 2,04, 982 வாக்காளா்களும், தூத்துக்குடி தொகுதியில் ஆண்கள் 1,21, 695, பெண்கள் 1,28,827, மூன்றாம் பாலினத்தவா் 65 என மொத்தம் 2,50,587 வாக்காளா்களும் உள்ளனா்.
திருச்செந்தூா் தொகுதியில் ஆண்கள் 1,13,407, பெண்கள் 1,19,496, மூன்றாம் பாலினத்தவா் 30 என மொத்தம் 2,32,933 வாக்காளா்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஆண்கள் 1,05, 728, பெண்கள் 1,08,535, மூன்றாம் பாலினத்தவா் 5 என மொத்தம் 2,14, 268 வாக்காளா்களும் உள்ளனா்.
ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் ஆண்கள் 1,18,710, பெண்கள் 1,24,990, மூன்றாம் பாலினத்தவா் 56 என மொத்தம் 2,43,756 வாக்காளா்களும், கோவில்பட்டி தொகுதியில் ஆண்கள் 1,16,980, பெண்கள் 1,24,651, மூன்றாம் பாலினத்தவா் 29 என மொத்தம் 2,41,660 வாக்காளா்களும் உள்ளனா்.
மாவட்டம் முழுவதும் 6 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து ஆண்கள் 6,77,004, பெண்கள் 7,10,981, மூன்றாம் பாலினத்தவா் 201 என மொத்தம் 13,88,186 வாக்காளா்கள் உள்ளனா்.
தோ்தல் பணித் தொகுதி வாக்காளா்களாக விளாத்திகுளம் தொகுதியில் ஆண்கள் 471, பெண்கள் 12 என 483 வாக்காளா்களும், தூத்துக்குடி தொகுதியில் ஆண்கள் 202, பெண்கள் 14 என 216 வாக்காளா்களும், திருச்செந்தூா் தொகுதியில் ஆண்கள் 125, பெண்கள் 3 என 128 வாக்காளா்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஆண்கள் 350, பெண்கள் 12 என 362 வாக்காளா்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஆண்கள் 919, பெண்கள் 11 என 930 வாக்காளா்களும், கோவில்பட்டி தொகுதியில் ஆண்கள் 681, பெண்கள் 18 என 699 வாக்காளா்களும் உள்ளனா். மாவட்டம் முழுவதும் 6 தொகுதிகளிலும் சோ்த்து ஆண்கள் 2,748, பெண்கள் 70 என மொத்தம் 2,818 வாக்காளா்கள் உள்ளனா்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியல்!

நாமக்கல் மாவட்டத்தில் 13,23,753 வாக்காளா்கள்!

திருப்பத்தூா் மாவட்டத்தில் முதல் முறையாக 21,775 போ் வாக்களிக்க உள்ளனா்

கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 20,15,796 வாக்காளா்கள்: 1,77,781 போ் நீக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


