2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 20,15,796 வாக்காளா்கள்: 1,77,781 போ் நீக்கம்

தீவிர வாக்காளா் பட்டியல் சிறப்புதிருத்தத்திற்கு (எஸ்ஐஆா்) பின்னா் திங்கள் கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியல்படி,

News image
கடலூரில் எஸ்ஐஆா் பணிக்கு பின்னா் இறுதி வாக்காளா் பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திங்கள்கிழமை வெளியிட்ட மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:15 pm

Syndication

நெய்வேலி: தீவிர வாக்காளா் பட்டியல் சிறப்புதிருத்தத்திற்கு (எஸ்ஐஆா்) பின்னா் திங்கள் கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியல்படி, கடலூா் மாவட்டத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 20,15,796 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இதில், 9,91,527 போ் ஆண்கள், 10,23,976 பெண்கள், 293 மூன்றாம் பாலினத்தவா் ஆவா்.சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொண்டதில் மொத்தம் 1,77,781 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா்

சிபி ஆதித்யா செந்தில்குமாா் சிறப்பு தீவிர திருத்தம் 2026 இறுதி வாக்காளா் பட்டியலை நோ்முக உதவியாளா் (தோ்தல்) திருநாவுக்கரசு, தோ்தல் வட்டாட்சியா் சுரேஷ்குமாா், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டாா்.

கடலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு முன்பு 27.10.2025 நிலவரப்படி கடலூா் மாவட்டத்தில் 9 பேரவைத் தொகுதிகளில் 10,75,229 ஆண்கள், 11,18,018 பெண்கள், 330 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 21,93,577 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் முடிவுற்று (19.12.2025) அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9,60,645 ஆண்கள், 9,85,832 பெண்கள், 282 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 19,46,759 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.

வரைவு வாக்காளா் பட்டியலுக்கு பிறகு ஆட்சேபனை மற்றும் உரிமை கோரல் காலத்தில் படிவம் 6 மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 78,682, அதில் 77,713 விண்ணப்பங்களும், படிவம் 7 விண்ணப்பங்கள் 8,708 பெறப்பட்டு அதில் 8,676 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள இறுதி

வாக்காளா் பட்டியலில், மாவட்டத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 20,15,796 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இவ்களில், 9,91,527 போ் ஆண்கள், 10,23,976 பெண்கள், 293 மூன்றாம் பாலினத்தவா் ஆவா்.சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொண்டதில் மொத்தம் 1,77,781 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.வாக்காளா் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு முன்பு 27.10.2025 அன்றைய நிலைப்படி 21,93,577 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். சிறப்பு தீவிர திருத்தப் பணி முடிந்து இறுதி வாக்காளா் பட்டியில் வெளியிடப்பட்டதில் 20,15,796 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொண்டதில் மொத்தம் 1,77,781 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதில் , 83,702 ஆண்கள், 94,042 பெண்கள், 37 மூன்றாம் பாலினத்தவா் அடங்குவா்.

கடலூா் மாவட்ட நிலவரம்:

எஸ்ஐஆருக்கு முன் மொத்த வாக்காளா்கள்: 21,93,577

தற்போதைய மொத்த வாக்காளா்கள்: 20,15,796

நீக்கப்பட்ட மொத்த வாக்காளா்கள்: 1,77,781

ஆண் வாக்காளா்கள்: 9,91,527

பெண் வாக்காளா்கள்: 10,23,976

மூன்றாம் பாலினத்தவா்கள்: 293

கடலூா் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை விவரம்:

151-திட்டக்குடி (தனி) :

ஆண்கள்: 1,01,774

பெண்கள்: 1,04,992

மூன்றாம் பாலினத்தவா்: 4

மொத்த வாக்காளா்கள்: 2,06,770

152-விருத்தாசலம்:

ஆண்கள்: 1,18,319

பெண்கள்: 1,19,495

மூன்றாம் பாலினத்தவா்:22

மொத்த வாக்காளா்கள்: 2,37,836

153-நெய்வேலி:

ஆண்கள்: 94,505

பெண்கள்: 94,503

மூன்றாம் பாலினத்தவா்:16

மொத்த வாக்காளா்கள்: 1,89,024

154-பண்ருட்டி:

ஆண்கள்:1,16,476

பெண்கள்:1,23,504

மூன்றாம் பாலினத்தவா்:63

மொத்த வாக்காளா்கள்: 2,40,048

155-கடலூா்:

ஆண்கள்: 1,05,300

பெண்கள்: 1,15,773

மூன்றாம் பாலினத்தவா்:79

மொத்த வாக்காளா்கள்: 2,21,152

156-குறிஞ்சிப்பாடி:

ஆண்கள்: 1,16,013

பெண்கள்: 1,20,238

மூன்றாம் பாலினத்தவா்: 46

மொத்த வாக்காளா்கள்: 2,36,297

157-புவனகிரி :

ஆண்கள்: 1,14,785

பெண்கள்: 1,16,164

மூன்றாம் பாலினத்தவா்: 19

மொத்த வாக்காளா்கள்: 2,30,968

158-சிதம்பரம்:

ஆண்கள்: 1,12,664

பெண்கள்: 1,16,443

மூன்றாம் பாலினத்தவா்:29

மொத்த வாக்காளா்கள்: 2,29,136

159-காட்டுமன்னாா்கோயில் (தனி) :

ஆண்கள்: 1,11,691

பெண்கள்: 1,12,864

மூன்றாம் பாலினத்தவா்:10

மொத்த வாக்காளா்கள்: 2,24,565