நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

செ.குளோரியான்

பாடல் - 7

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்று ஓர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படிகால் வழி ஏறிக் கண்டீர்
கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர் அதனுள்
ஆடு புள்கொடி ஆதிமூர்த்திக்கு அடிமை புகுவதே.

இந்த உலகிலே பலமுறை பிறந்து, வாழ்க்கைச் சுழலிலே சிக்கி ஓடி, மற்ற தெய்வங்களை முறைப்படி பாடி, ஆடி, வணங்கி, பலவிதமாக வழிபட்டு எதைக் கண்டீர்கள்? (இவை போதாது என்பதைத்தானே கண்டீர்கள்?) வானவர்களெல்லாம் ஒன்றாகக் கூடிப் போற்றி நிற்கிற திருக்குருகூரிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், ஆடுகின்ற கருடக்கொடியைக் கொண்ட ஆதிமூர்த்தி, அவனுக்கு அடிமையாகுங்கள்.

******

பாடல் - 8

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன்
                                                                                         அவனை
நக்கபிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன்
                                                                                        அருளே,
கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர்
                                                                                        அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே.

நக்கபிரானான சிவபெருமானின் அடிமை என்று வந்து புகுந்தான் மார்க்கண்டேயன், சிவன் அவனைக் காத்தான், இதற்குக் காரணம், எம்பெருமான் நாராயணனின் அருள்தான், கொக்குகளைப்போல் மலர்ந்த பெரிய தாழைகள் வேலிகளாக அமைந்த திருக்குருகூரிலே அந்த ஆதிப்பிரான் எழுந்தருளியிருக்கிறார், அவரைத்தவிர மற்ற தெய்வங்களை நீங்கள் பேசலாமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.