நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

வாழ்க்கையெனும் போர்க்களம்: ஆர். வித்யா

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

ஆணோ பெண்ணோ கலைப்பு தவிர்ப்போம் !
ஒன்றோ இரண்டோ உயிர்ப்புடன் வளர்ப்போம்!
ஜாதி கொல்வோம்; சமநீதி கொள்வோம் !
உயிர் கொல்லாது உணவு உட்கொள்வோம்!

உரம் தவிர்த்து பயிர் வளர்ப்போம்!
அழகு – வீரத்திற்கு மயிர் வளர்ப்பதை மாற்றி வைப்போம்!
‘அழகு குழந்தை’ போட்டி ஒழிப்போம்; 
‘ஆரோக்கிய குழந்தை’ வளர்ப்போம் !
பொதுக் கல்வியைப் புகுத்த வைப்போம் !

‘புரட்சி’ எனும் வார்த்தையை புதைத்து வைப்போம் !
ஜனநாயகம் காக்க நோட்டோவுக்கு வெய்யிலில் நின்றேனும் வாக்களிப்போம் !
கெட்ட தொடரை அணைப்போம்; நல்லதை அறிந்து அதை மட்டும் படிப்போம்!
குடிநீருக்குப் போராடுவோம்; குடிப்போரை ஊரை விட்டு விலக்கி வைப்போம்!
தெய்வம் எதுவென்று உள்ளுக்குள்ளே சென்று அறிவோம்!

தேவையற்ற குப்பையை வெளியே வீசியெறிவோம்!
உழைப்பிற்குப்பின் வெந்நீராடலைத் தொடர்வோம்!
இசை கேட்போம் ; உலகே இன்பமயமாவதை உணர்வோம் !
எல்லாம் கிடைத்துவிட்டால் வாழ்க்கை எங்கும் பூக்கோலம்!
இல்லையேல் வாழ்க்கையென்பது என்றும் போர்க்களம்!! - 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.