நிழல் தேடி: கவிஞர். ச.மணிகண்டன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

நிழல் தேடும் பறவை
கேள்வி கேட்டது
மனிதா இது நியாயமா ?
வானில் உதிக்கும் சூரியன்
இரவில் வரும் நிலா
மனதை வருடும் தென்றல்
மெல்ல நனைக்கும் மழை
பூமியில் இன்னும் பல
உனக்கு மட்டுமா சொந்தம் ?
நிழல் தேடும் பறவை
நிலை மாறி அலைகிறேன்
நிலத்தில் மரம் அகற்றி
நிஜத்தில் உயிர் கொய்கிறாய்
உயிரினம் யாவும் ஒன்றே
பிறப்பும் இறப்பும் சமமே
எதற்கு இத்தனை ஆதிக்கம்
எங்களிடம் திணிக்கிறாய்
சுயநல நரனே ! சுயநல நரனே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...