பிஸ்கட் சாப்பிட்டால் என்ன ஆகும்...?
அனைவருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு நொறுக்குத் தீனி பிஸ்கட். அனைத்து வயதினருமே சாப்பிடும் ஒரு பொருளாக உள்ளது.
சாதாரண பிஸ்கட்டுகளில் அதிக கலோரிகள், கொழுப்புகள் உள்ளதால் அது ஆரோக்கியமானது அல்ல என்றே கூறப்படுகிறது.
பசி எடுக்கும்போது பிஸ்கட்டை சாப்பிடுவது எதிர்காலத்தில் உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
சிறுதானியங்களில் பிஸ்கட்டுகள் இப்போது அதிகம் விற்பனை செய்யப்படும் நிலையில் அதுவும் கெட்டுப்போகாமல் இருக்க ஏதேனும் ரசாயனப் பொருள் சேர்க்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
பிஸ்கட் மட்டுமல்ல கேக், ரஸ்க், பிரட் எனும் மைதா பொருள்களில் கூடுதல் ரசாயனக் கேடுகள் நிறைந்துள்ளன. நார்ச்சத்துகள் குறைவு. இவை வயிற்றுப்போக்கு, மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
மேலும் பிஸ்கட் அதிகம் சாப்பிடுவது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதயச் செயலிழிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
அதனால் பிஸ்கட் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது. அப்படியே சாப்பிட விரும்பினால் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.