நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

வீர மங்கை: பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

வீரத்தைச்  சொல்லுகின்ற  புறநா  னூற்றில்            வியக்கின்ற  பலசெய்தி   பெண்கள்  பற்றிதீரமுடன்  புலிதன்னை  முறத்தால்  ஓட்டும்            திகழ்வீரப்  பெண்மணியின்  காட்சி   காட்டும் ஆரத்தான்   தழுவிட்ட   கணவன் ;   அண்ணன்            ஆர்த்தபெரும்   போரினிலே   விழுப்புண்  பெற்றேவீரமுடன்   மாண்டபின்பு   பெற்றெ   டுத்த            விளங்குமொரு   மகனையுமே   அனுப்பி   வைத்தாள் !போர்க்களத்தில்   மகனிறந்தான்   முதுகைக்   காட்டிப்            போய்பார்ப்பாய்   எனும்செய்தி   கேட்ட   தாயோஆர்த்தெழுந்தாள்   புறமுதுகு   காட்டி  ருந்தால்            அவனுக்குப்   பால்தந்த   மார்ப   றுப்பேன்சீர்த்தமறக்   குலப்பெண்நான்   என்று   ரைத்தே            சீறிவந்தே   போர்க்களத்தில்   மகனைக்   கண்டாள்கூர்வாளால்   தைத்தமார்பு   காட்சி   கண்டே            குதூகளித்தாள்  பெற்றநாளின்   பெரிது  வந்தாள் !அத்தாயின்   மரபினிலே   வந்த   பெண்ணாம்            அந்நாளில்   தமிழகத்தின்   சேர   நாடாய்தித்திக்கும்   தமிழ்ப்பண்பில்   திளைத்தி   ருந்த            திருவாங்கூர்   என்கின்ற   நாடு  தன்னில்வித்தாகத்   தாழ்ந்தகுலம்   தனிலு   தித்த            வீரப்பெண்   நாஞ்செலியாம்   அழகுப்  பெண்ணாள்முத்தாகத்   திருவாங்கூர்   அரசு   தம்மை            முன்நின்றே   எதிர்த்திட்டாள்   மானம்காக்க !மார்புதனைத்   துணியாலே   மறைப்ப   தற்கு            மார்புவரி   செலுத்தவேண்டும்   என்ற  ஆணைஊர்தன்னில்   விதித்தபோது   வெகுண்டெ   ழுந்தே            உனக்கெதற்குத்   தரவேண்டும்   என்றே   கேட்டாள்தார்வேந்தன்   ஆணையிது   என்ற  போதும்            தன்னுடலின்   உறுப்புதனை   மறைப்ப  தற்குயார்வந்து   கேட்டாலும்   வரியைத்   தாரேன்            யாருக்கும்   அஞ்சிநானும்   பணியேன்   என்றாள் !பலமுறைதான்   அரசாங்கம்   கேட்ட  போதும்            பாவையவள்   பணியவில்லை  எதிர்த்தே  நின்றாள்நிலமாளும்   அரசனவன்   ஆணை   தாங்கி            நிர்ணயித்த   வரிதண்ட   அலுவ  லர்தாம்குலவிளக்காம்   நாஞ்செலியின்   வீட்டைத்   தேடிக்            குதிரையிலே   வந்திறங்கித்   தட்டிக்   கேட்கப்புலப்பண்பாம்   தமிழ்வீரம்   கொப்ப   ளிக்கப்            புரிந்திட்டாள்   ஒருசெயலை   வியக்கும்  வண்ணம் !வரிகேட்டு   வந்தவனின்   கண்கள்  முன்பு            வாழையிலை   உள்ளிருந்தே   எடுத்து  வந்துஅரிவாளால்   தன்னிரண்டு   மார்ப   ரிந்தே            அவன்கையில்   கொடுத்துயிரை   மாய்த்துக்   கொண்டாள்அரிவையவள்   செயல்கண்டு   மன்னன்  வெட்கி            அவ்வரியை   நீக்கிட்டான் !  புறநா  னூற்றுத்தெரிவையர்தம்   வீரமின்றும்   வாழ்வ   தாலே            தெள்ளுதமிழ்   மறத்தியர்தாம்   சாவ   தில்லை !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.