நல்லகண்ணு மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு: நடிகர் ரஜினிகாந்த்!
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்..


இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு என்று நடிகர் ரஜினி காந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா. நல்லகண்ணு இன்று (பிப். 25) காலமானார். அவருக்கு வயது 101. ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு காரணமாக பிப்ரவரி 1 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பல்துறை மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வந்தனர்.
வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரு நாள்களாக அவரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், இன்று உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவில்,
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடுசெய்ய முடியாதது.
மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த அய்யா நல்லுகண்ணுவின் ஆன்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...